அவன சும்மா விட மாட்டேன்; மிரட்டி பார்க்கும் முகமது ஷமி !!

அவன சும்மா விட மாட்டேன்; மிரட்டி பார்க்கும் முகமது ஷமி

இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவை பந்தால் அடித்து காயப்படுத்துவேன் என இந்திய பந்துவீச்சாளர் முகமடு ஷமி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவிய இந்திய அணி, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் போது, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் வீசிய பந்தை இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ பிடித்தார்.

அப்போது வேகமாக வந்த பந்து அவரது இடதுகை நடுவிரலை பயங்கரமாகத் தாக்கியது. வலியால் துடித்த அவர் வெளியேறினார். பேர்ஸ்டோவுக்கு ஸ்கேன் எடுத்து பார்த்ததில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனால் பேர்ஸ்டோ 4வது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், அவர் 4அது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார். ஆனால் அவர் கீப்பிங் செய்யப்போவதில்லை. ஃபீல்டிங் மற்றும் பேட்டிங் மட்டும் செய்யவுள்ளார்.

India’s captain Virat Kohli salutes the crowd as he leaves the pitch after getting out lbw for 103 runs during the third day of the third Test cricket match between England and India at Trent Bridge in Nottingham,

இந்நிலையில் 4வது டெஸ்ட் தொடர்பாக பேசியுள்ள இந்திய பந்துவீச்சாளர் ஷமி, “பேர்ஸ்டோ அசரும் நேரத்தில் அவரை பந்தால் காயப்படுத்துவேன். நான் மட்டுமல்ல எந்த ஒரு வேகப்பந்துவீச்சாளருமே, பேட்ஸ்மேன்கள் அசரும் நேரத்தில் அதைத்தான் செய்வார்கள். அதனால் நான் அதற்கு கண்டிப்பாக முயற்சி செய்வேன். நீண்ட இடைவேளைக்கு பிறகு நம் அணியில் நல்ல வேகப்பந்து வீச்சாளர்கள் கிடைத்துள்ளனர். இங்கிலாந்து அல்ல எந்த அணியும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நிகராக இல்லை. நாங்கள் எங்கள் பந்துவீச்சு தந்திரங்களை, புதிதாக வரும் ஜூனியர் பந்துவீச்சாளர்களுக்கு கற்றுக்கொடுக்கின்றோம்” என்றார்.

Mohamed:

This website uses cookies.