வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்துவீச்சாளர் ஷேன் சில்லிங்போர்ட் உள்ளூர் போட்டிகளில் பந்துவீச வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய தடை செய்யப்பட்டுள்ளார் கடந்த பல வருடங்களாக சுழற்பந்து வீச்சாளராக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆக செயல்பட்டு வரும் இவர் இதுவரை மூன்று முறை கிரிக்கெட்டில் பந்துவீச தடை செய்யப் பட்டுள்ளார்
தற்போது அவரது பந்து வீசும் விதம் எரிவது போன்று இருப்பதால் அவரை தடைசெய்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம். தற்போது அவரது பந்துவீச்சு விதத்தை மாற்றி விதிகளுக்கு உட்பட்டு மீண்டும் சரியாக வீசுவார். அப்படி வீசும் போது அவர் மீண்டும் உள்ளூர் போட்டிகளிலும் சர்வதேச போட்டிகளில் பந்துவீச அனுமதிக்கப்படுவார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக 2010ஆம் ஆண்டு இதே போன்று அவரது பந்து வீசும் விதம் விதிகளுக்கு அப்பாற்பட்டு 15 டிகிரியை தாண்டி அவரது முழங்கை சென்றதால் அவர் தடை செய்யப்பட்டார். பின்னர் 2013ஆம் ஆண்டு மீண்டும் அதே போன்று அவரது பந்துவீச்சு விதத்தால் அவர் தடை செய்யப்பட்ட தற்போது ஐந்து வருடம் கழித்து மீண்டும் அவர் உள்ளூர் போட்டிகளில் பந்துவீச வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தால் தடைசெய்யப்பட்டுள்ளார்.
கயானா அணிக்காக ஆடி வரும் அவர் அங்கு நடந்த முதல் தர போட்டியில் 2 விக்கெட் வீழ்த்தி தனது அணியை வெற்றி பெறச் செய்தார். ஆனால் அந்த போட்டியில் அவர் வித்தியாசமாக பந்துவீச்சிலும் அவரது பந்து வீசும் வீதம் கேள்விக்குள்ளாகி உள்ளதாகவும் தெரிவித்தனர். இதன் காரணமாக வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் வாரியத்திடம் தற்போது இதனை வழக்காக எடுத்துக்கொண்டு வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் வாரியம் அவருக்கு பந்துவீச தடை செய்துள்ளது. செய்துள்ளது அவர் தற்போது அங்கு உள்ள கிரிக்கெட் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகத்தில் தனது பந்து வீசுவதை மாற்றியமைத்து காட்டினால் அவர் மீண்டும் பந்துவீச அனுமதிக்கப்படுவார்.
கடந்த சில வருடங்களாக சர்வதேச கிரிக்கெட் வாரியம் பந்துவீச்சாளர்களை நன்கு கவனித்து வருகிறது. விதியின்படி ஒருவர் பந்துவீசும் போது அவரது கை 15 டிகிரிக்கும் மேலாக மடங்கக் கூடாது அவ்வாறு மடங்கினால் அவர்கள் வீசும் பந்து எரிவது என்று அழைக்கப்படும். இது ஆட்டத்தில் அனுமதிக்கக்கூடாது என்று புத்தகத்தில் விதி உள்ளது.
இதன் காரணமாக கடந்த சில வருடங்களாக பந்துவீச்சாளர்களும் வேகப்பந்து வீச்சாளர்களும் தடை செய்யப்பட்டு பின்னர் மீண்டும் அவர்கள் பந்து வீசும் விதத்தை சரிசெய்து கிரிக்கெட் ஆட வந்துள்ளனர்.