ஆஸ்திரேலிய அணியின் சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்த சேன் வார்ன்; முக்கிய வீரர்களுக்கு இடம் இல்லை !!

ஆஸ்திரேலிய அணியின் சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்த சேன் வார்ன்; முக்கிய வீரர்களுக்கு இடம் இல்லை

சுழற்பந்து வீச்சு ஜாம்பவானான ஷேன் வார்னே, ஆலன் பார்டர் தலைமையிலான ஆஸ்திரேலியாவின் சிறந்த ஒருநாள் அணியை தேர்வு செய்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதனால் சமூக வலைத்தளங்கள் மூலம் முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை இதன்மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

ஆஸ்திரேலியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணியை தேர்வு செய்துள்ளார். அந்த அணிக்கு ஆலன் பார்டரை கேப்டனாக தேர்வு செய்துள்ளார்.

ஷேன் வார்னே தேர்வு செய்துள்ள ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. மார்க் வாக், 2. ஆடம் கில்கிறிஸ்ட், 3. ரிக்கி பாண்டிங், 4. டீன் ஜோன்ஸ், 5. மைக்கேல் கிளார்க், 6. ஆலன் பார்டன் (கேப்டன்), 7. மைக்கேல் பெவன், 8. ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், 9. பிரெட் லீ, 10. கிரேக் மெக்டெர்மோட், 11. கிளென் மெக்ராத்.

MELBOURNE, AUSTRALIA – DECEMBER 28: Shane Warne looks on during day three of the Fourth Test Match in the 2017/18 Ashes series between Australia and England at Melbourne Cricket Ground on December 28, 2017 in Melbourne, Australia. (Photo by Scott Barbour/Getty Images)

‘‘மார்க் வாக் அல்லது மேத்யூ ஹெய்டன் ஆகியோரில் ஒருவர் என்று வரும்போது மார்க் வாக்கை தேர்வு செய்தேன். டீன் ஜோன்ஸ் விக்கெட்டுகளுக்கு இடையில் ஓடுவதில் மிகவும் சிறந்தவர். இதனால் அவரை தேர்வு செய்தேன். மைக்கேல் பெவன் தலைசிறந்த மேட்ச் வின்னர். சைண்ட்ஸ் அடித்து ஆடும் பேட்ஸ்மேன். அதே சமயத்தில் பந்தும் வீசக்கூடியவர்’’ எனக் கூறினார்.

Mohamed:

This website uses cookies.