ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்னே பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியில் சமகால தலைசிறந்த 5 பேட்ஸ்மேன்கள் குறித்து பேசியுள்ளார்.
தனது அபாரமான சுழற்பந்து வீச்சின் மூலம் தான் விளையாடிய காலங்களில் ராஜாவாக வலம் வந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்னே கிரிக்கெட் தொடர் சம்பந்தமான கருத்துக்களை ஆக்டிவாக பேசி வருவது வழக்கம். அந்த வகையில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் சமகால கிரிக்கெட் தொடரின் தலைசிறந்த 5 பேட்ஸ்மேன்களை வரிசைப்படுத்தி பேசியுள்ளார், அந்த வீடியோ பதிவு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது.
அதில் அவர் பேசிருந்ததாவது, சமகால கிரிக்கெட் தொடரின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் முதல் வீரராக நான் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை தேர்வு செய்கிறேன், அவர் எந்த மைதானமாக இருந்தாலும் எந்த பந்துவீச்சாளராக இருந்தாலும் அவர்களை மிகவும் எளிதாக கையாள்வதில் கில்லாடியாக இருக்கிறார்.
மேலும் அவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்டை தேர்வு செய்கிறேன், அவர் சமீபத்தில் ஆறு சதங்கள் அடித்து தன்னுடைய பேட்டிங் திறமையை நிரூபித்துள்ளார். அவரைத் தொடர்ந்து மூன்றாம் இடத்தில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனை தேர்வு செய்துள்ளார், கேன் வில்லியம்சன் பலமுறை சிறப்பாக செயல்பட்டு நியூசிலாந்து அணிக்கு பல வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார். மேலும் இந்திய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு கோப்பையை பெற்றுக் கொடுத்துள்ளார் என்றும் அதில் அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் அவரை தொடர்ந்து நான்காவது இடத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை தேர்வு செய்துள்ளார், கடந்த இரண்டு வருடங்களில் ஒரு சதம் கூட அடிக்காமல் தடுமாறி வரும் விராட் கோலியை தேர்வு செய்தது,விராட் கோலி சதம் அடிக்கவில்லை என்றாலும் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்பதை தெரிவிக்கும் விதமாக உள்ளது.
இவர்களைத் தொடர்ந்து 5வது இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் லபுசக்னேவை தேர்வு செய்துள்ளார்.இவர் 19 டெஸ்ட் தொடர்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.