உங்க திமிறுக்கு கிடைச்ச தண்டனை தாண்டா இது; விளாசும் சேன் வார்ன்
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மிக மோசமான தோல்வியை தழுவிய ஆஸ்திரேலிய அணியை அந்த அணியின் முன்னாள் வீரரான சேன் வார்னே கடுமையாக சாடியுள்ளார்.
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றிய நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயன் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராயும் ஜானி பேர்ஸ்டோவும் களமிறங்கினர்.
ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 231 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனையடுத்து வெறும் 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள், இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை விட மோசமாக செயல்பட்டு வந்தவேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்து அடுத்தடுத்து வெளியேறினர். 48.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலிய அணி வெறும் 207 ரன்கள் மட்டுமே எடுத்ததன் மூலம் இங்கிலாந்து அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
இந்தநிலையில், ஆஸ்திரேலிய அணியின் இந்த தோல்வி குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் சேன் வார்ன் ஆஸ்திரேலிய அணியை கடுமையாக சாடியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் தோல்வி குறித்து சேன் வார்ன் பேசுகையில், சமீபகாலமாக ஆஸ்திரேலிய அணி மிக மோசமாகவே விளையாடி வருகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி.20 போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி மிக மோசமாக விளையாடியது. என்னை பொறுத்தவரையில் ஆஸ்திரேலிய வீரர்களின் ஆணவத்திற்கு கிடைத்த சரியான அடி இது என்றே கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.