இந்திய அணியின் சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்த சேன் வார்ன்; கேப்டன் யார் தெரியுமா..?
ஆஸ்திரேலியாவின் சுழல் ஜாம்பவான் ஷேன் வார்ன், இந்தியாவின் ஆல்டைம் பெஸ்ட் டெஸ்ட் அணியை தேர்வு செய்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால், ஊரடங்கால் உலகின் பெரும்பகுதி மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். சமூக, பொருளாதார நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கியிருப்பதுடன், விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டன.
வீடுகளில் முடங்கியிருக்கும் இந்த சூழலில், ரசிகர்களின் கேள்விகளுக்கு முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பதிலளித்துவருகின்றனர். ஆஸ்திரேலியாவின் ஆல்டைம் பெஸ்ட் டெஸ்ட் அணியை தேர்வு செய்திருந்த ஷேன் வார்ன், தற்போது இந்தியாவின் ஆல்டைம் பெஸ்ட் டெஸ்ட் அணியை தேர்வு செய்துள்ளார்.
நவ்ஜோத் சிங் சித்து – வீரேந்திர சேவாக் ஆகிய இரண்டு அதிரடி வீரர்களையும் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக தேர்வு செய்துள்ளார் ஷேன் வார்ன்.
நவ்ஜோத் சிங் சித்து ஸ்பின் பவுலிங்கை திறமையாக ஆடக்கூடிய அபாரமன வீரர். நான் பார்த்தவரையில், ஸ்பின் பவுலிங்கை அபாரமாக ஆடக்கூடியவர் சித்து தான். எனது பவுலிங்கை சித்து அருமையாக ஆடியிருக்கிறார். அதேநேரத்தில் அந்த காலக்கட்டத்தில் ஆடிய மற்ற ஸ்பின்னர்களின் பவுலிங்கையும் சித்து அருமையாக ஆடியதாக, அந்த ஸ்பின்னர்களே என்னிடம் கூறியிருக்கிறார்கள்.
மூன்றாம் வரிசை வீரராக டிராவிட்டை தேர்வு செய்த ஷேன் வார்ன், டிராவிட் எனக்கு நீண்டகால நண்பர். ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருவரும் இணைந்து ஆடியபோது அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர் எங்களுக்கு(ஆஸ்திரேலியாவுக்கு) எதிராக நிறைய சதங்களை அடித்துள்ளார். எனவே அவர் தான் மூன்றாம் வரிசை வீரர். சச்சின் டெண்டுல்கர் கிரேட் கிரிக்கெட்டர். அவர் தான் நான்காம் வரிசை வீரர். சச்சினை பற்றி வேறு எதுவுமே சொல்ல தேவையில்லை.
கங்குலி, அசாருதீன், கபில் தேவ், ஹர்பஜன் சிங், நயன் மோங்கியா, அனில் கும்ப்ளே, ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோரையும் இந்தியாவின் பெஸ்ட் அணியில் சேர்த்துள்ளார் ஷேன் வார்ன். இந்த அணியின் கேப்டனாக கங்குலியை தேர்வு செய்துள்ளார்.
ஷேன் வார்ன் தேர்வு செய்த இந்தியாவின் ஆல்டைம் பெஸ்ட் டெஸ்ட் அணி:
வீரேந்திர சேவாக், நவ்ஜோத் சிங் சித்து, ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், முகமது அசாருதீன், சவுரவ் கங்குலி(கேப்டன்), கபில் தேவ், ஹர்பஜன் சிங், நயன் மோங்கியா, அனில் கும்ப்ளே, ஜவகல் ஸ்ரீநாத்.