கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் என்பார்கள் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் லிமிடெட் ஓவர் கேப்டனாகவும் செயல்படுகிறார். இவர் இங்கிலாந்தில் நடக்கும் புதுவிதமான விதிகளைக் கொண்ட த ஹன்ரட் (The Hundred)என்ற தொடரில் லண்டன் ஸ்பிரிட் சைட் என்ற அணிக்கும் கேப்டனாக உள்ளார்.இந்தப் போட்டியானது கடந்த வருடம் ஏற்பட்ட கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னேவை பற்றி இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மார்கன் அவருடன் நடந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
அதில் அவர் கூறியதாவது,அவருடன் ஒரே அணியில் இருந்தது மிகவும் சிறந்த ஒரு அனுபவமாக இருந்தது, மேலும் அவருடன் சந்தித்து கிரிக்கெட் பற்றி பேசியது ஒரு நல்ல பாடமாக அமைந்தது. நான் எனது வாழ்க்கையில் சந்தித்ததிலேயே கிரிக்கெட் அறிவு ஷேன் வார்னேவிடம் தான் அதிகம் உள்ளது.அவர் விளையாட்டில் ஏதாவது ஒரு யோசனை வழங்கினால் அது மிகவும் புதுமையானதாக இருக்கும் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது, அவருடன் சேர்ந்து பயணிப்பது எங்களுக்கு ஒரு மிகப்பெரும் அனுபவமாக அமைகிறது, நிச்சயம் லண்டன் ஸ்பிரிட் சைட் அணிக்கு ஜாம்பவான் ஷேன் வார்னே உடன் இருப்பது மிகப்பெரிய பரிசாக அமையும் என்று தெரிவித்தார்.ஷேன் வார்னே கடந்த 20 வருடங்களாக விளையாடவில்லை ஆனால் இவருடைய கிரிக்கெட் யோசனை மிகவும் அற்புதமாக உள்ளது என்றும் பாராட்டினார்.
மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பற்றி அவர் கூறியதாவது கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டி என்பது ஒரு மிகப்பெரிய பாடமாக அமைந்தது இந்நிலையில் முதல் வருடம் கொல்கத்தா அணிக்கு கேப்டனாக பயணிக்க போகிறேன் மேலும் என்னுடைய பயிற்சியாளர் பிரெண்டன் மக்கலம்,நிச்சயம் அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொள்வேன் மேலும் எங்களது அணிக்கு மிகப் பெரும் பலம் வாய்ந்த அணியாக இருக்கிறது, மற்றும் அணி வீரர்கள் சிறந்த உடல் தகுதியுடன் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் வருகிற ஏப்ரல் 9 2021 காணப் ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளதால் அனைத்து வீரர்களும் தங்களின் பயிற்சிகளை மிகத்தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.