கடுமையான காயத்திலும் சென்னை அணிக்காக போராடிய வாட்சன்!! 6 தையல்களுடன் நாடு திரும்பினார்!!!

மும்பை அணிக்கு எதிரான இறுதி போட்டியில் கடுமையான காயத்திலும் அணிக்காக இறுதிவரை போராடினார் வாட்சன். போட்டியின் முடிவில் அவரது காயத்திற்கு 6 தையல்கள் போடப்பட்டது. இது போட்டிக்கு பின்னர் தான் தெரியவரவே வாட்சனை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே அவரது இந்த கடின உழைப்பிற்க்காக கொண்டாடுகிறது.

சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதிய இந்தாண்டு (2019) ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 149 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக களமிறங்கிய சென்னை அணிக்கு டு பிளேஸிஸ் சற்று அதிரடியாக ஆடிவிட்டு ஆட்டமிழந்தாலும், மறுபுறம் வாட்சன் மற்ற போட்டிகளை போல அவசரம் இல்லாமல், நிதானம் கடைபிடித்தார்.

ஆனால், ரெய்னா, ராயுடு வந்த வேகத்திலேயே வெளியேறி லீக் போட்டிகளை போலவே இறுதி போட்டியிலும் ஏமாற்றினார். நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த தோனியும் சர்ச்சைக்கு உரிய முறையில் ரன் அவுட் வழங்கப்பட்டு வெளியேற ஆட்டம் சென்னை வசம் இருந்து விலகியது போல ஆனது. ஆனால் மறுமுனையில் மனம் தளராமல் தனி ஒருவனாக போராடினார் வாட்சன்.

ரன் ஓடிக்கொண்டிருக்கையில் எல்லைக்கோட்டை கடக்கையில் இவருக்கு இடது காலில் காயம் ஏற்பட்டது அதையும் பொருட்படுத்தாமல், ஆடினார். ஒருகட்டத்தில் இவரது காலில் இருந்து கடுமையாக ரத்தம் வாடிய ஆரம்பித்தது. போட்டியை கவனித்த யாரும் இவரை கவனிக்கவில்லை.

இறுதி ஓவரில் 9 ரன்கள் தேவை இருக்க, முதல் 3 பந்துகளில் 4 ரன்கள் எடுத்தது சென்னை, 4வது பந்தில் மேலும் 2 ரன்கள் ஓட முயற்சிக்கையில் வாட்சன் சரியாக ஓட முடியாமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இறுதியில் 1 ரன் வித்தியாசத்தில் சென்னை அணி கோப்பையை மும்பை வசம் பறிகொடுத்தது.

போட்டி முடிந்த பிறந்து ஹர்பஜன் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்த பிறகு தான் அனைவருக்கும் தெரியவந்தது. வாட்சனின் காலில் கடுமையாக ரத்த கசிவு இருந்தது என்றும், இதற்காக இவருக்கு 6 தையல்கள் போடப்பட்டுள்ளது என்றும். இதற்காக தோல்வியை சற்றும் நினைக்காமல், வாட்சனின் இந்த ஈடுபாட்டிற்க்காக அவரை கொண்டாட துவங்கினர்.

.

 

Prabhu Soundar:

This website uses cookies.