ஆண்டிகுவா டெஸ்ட் – வங்காள தேசத்தை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 219 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்

ஆண்டிகுவா டெஸ்டில் தனது அபாரமான பந்து வீச்சினால் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 219 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #WIvBAN

ஆண்டிகுவா டெஸ்ட் – வங்காள தேசத்தை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 219 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்
ஆண்டிகுவா:

வங்காள தேசம் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆண்டிகுவா நகரில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

வெஸ்ட் இன்டீஸ் அணியினரின் பந்து வீச்சில் அனல் பறந்தது. குறிப்பாக, கீமர் ரோச் சிறப்பாக பந்து வீசி வங்காள தேசத்தின் முன்னணி வீரர்களை அவுட்டாக்கினார். தொடக்க ஆட்டக்காரரான லியான் தாஸ் மட்டும் இரட்டை இலக்கத்தை தொட்டார். மற்ற அனைவரும் ஒற்றை இலக்க எண்களிலேயே வெளியேறினர். இதனால் வங்காள தேச அணி தனது முதல் இன்னிங்சில் 43 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

வெஸ்ட் இன்டீஸ் அணியின் கீமர் ரோச் 8 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் 3 விக்கெட்டும், ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

Jason Holder

இதைத்தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. அணியின் எண்ணிக்கை 113 ரன்களாக இருக்கும்போது டேவன் ஸ்மித் 58 ரன்களில் அவுட்டாகினார். அடுத்து ஆடிய பாவெல் 48 ரன்கள் எடுத்து அவுட்டானார். பிராத்வைட் சிறப்பாக ஆடி 121 ரன்களில் அவுட்டானார். அடுத்து ஆடிய ஷாய் ஹோப் 68 ரன்களில் அவுட்டானார். கடைசியில் ஜேசன் ஹோல்டர், கீம்ர் ரோச் ஓரளவு ரன்கள் எடுத்தனர். இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 137.3 ஓவரில் 406 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.

வங்காள தேசம் சார்பில் அபு ஜெயத், மெஹிடி ஹசன் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், ஷகிப் அல் ஹசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Mehidy Hasan Miraz

தொடர்ந்து, வங்காள தேசம் அணியினர் இரண்டாவது இன்னிங்சை ஆடினர். முதல் இன்னிங்ஸ் போலவே விக்கெட்டுகள் மளமளவென விழுந்தது.

இறுதியில், வங்காள தேச அணி 40.2 ஓவரில் 144 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நுருல் ஹசன் மட்டும் தாக்குப்பிடித்து 64 ரன்கள் எடுத்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஷனோன் காப்ரியல் 5 விக்கெட்டுகளும், ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 219 ரன்கள் வித்தியாசத்தில் வங்காள தேசத்தை வீழ்த்தியது. ஆட்ட நாயகனாக கீமர் ரோச் தேர்வு செய்யப்பட்டார்.

Editor:

This website uses cookies.