இனி எந்த பிரச்சனையும் இல்ல… “Lord” ஷர்துல் தாகூரை சரியான விலைக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி !!

இனி எந்த பிரச்சனையும் இல்ல… “Lord” ஷர்துல் தாகூரை சரியான விலைக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ஷர்துல் தாகூரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ரச்சின் ரவீந்திராவை 1.80 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அடுத்ததாக இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ஷர்துல் தாகூரை 4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வளர்க்கப்பட்ட வீரர்களில் ஒருவரான ஷர்துல் தாகூரை, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதிக விலை கொடுத்து ஏலத்தில் எடுத்திருந்தது. ஷர்துல் தாகூரை கடந்த தொடர்களில் சரியாக பயன்படுத்தி கொள்ளாத கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை இந்த முறை தனது அணியில் இருந்தும் விடுவித்தது.

ஷர்துல் தாகூரை இந்த முறை மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே ஏலத்தில் எடுக்கும் என சுரேஷ் ரெய்னா போன்ற முன்னாள் வீரர்கள் பலர் கணித்திருந்த நிலையில், பலரின் கணிப்பை போன்றே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே ஷர்துல் தாகூரை ஏலத்தில் எடுத்துள்ளது.

Mohamed:

This website uses cookies.