டெஸ்ட் தொடரை இந்தியா தான் கைப்பற்றும்; அடித்து சொல்லும் தென்னாபிரிக்கா ஜாம்பவான்!

இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றுவதற்கு அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றது என ஷான் பொல்லாக் தனது கணிப்பில் தெரிவித்துள்ளார்

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடி வரும் டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றியை பெற்றுள்ளது.

இந்திய அணி டெஸ்ட் வரலாற்றில் முதல்முறையாக செஞ்சூரியன் மைதானத்தில் வெற்றியை பதிவு செய்தது. 1992ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் தோல்வியை தழுவியது இல்லை. முதல் முறையாக 2வது டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியது. இதனால் இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. மூன்றாவது போட்டி வருகிற 11-ஆம் தேதி கேப் டவுன் மைதானத்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும். இதற்கு முன்னதாக விளையாடிய ஏழு முறையில், ஆறுமுறை தோல்வியையும் ஒரு முறை டிராவிலும் முடிவடைந்திருக்கிறது. முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில், 3வது டெஸ்டில் இந்திய அணி களம் இறங்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேநேரம் வரலாற்றை மீண்டும் ஒருமுறை நிகழ்த்திக் காட்ட தென்ஆப்பிரிக்க அணியும் முயற்சி செய்யும்.

இதற்கிடையில், யார் இந்த தொடரை கைப்பற்றுவார்? என தென் ஆப்பிரிக்க அணியின் ஜாம்பவான் பொல்லாக் தனது கணிப்பை தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில், “கேப் டவுன் மைதானத்தில் இந்திய அணி நல்ல ரெக்கார்டு வைத்திருக்கிறது. இந்திய அணியின் ஜாம்பவான்கள் பலர் இந்த மைதானத்தில் நன்றாக செயல்பட்டு இருக்கின்றனர். தற்போது அணியில் இருக்கும் புஜாரா, விராட் கோலி ஆகியோரும் நன்றாக விளையாடி உள்ளனர்.

தற்போது இருக்கும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் நல்ல பார்மில் இருக்கின்றனர். இரண்டாவது போட்டியில் ஏற்பட்ட தோல்வி அவர்களை பெரிய அளவில் பாதிக்காது என நினைக்கிறேன். 3வது டெஸ்ட் போட்டியை யார் வெல்வார்? என கேட்டால், நிச்சயம் இந்திய அணி இந்த பந்தயத்தில் முன்னிலை வகிக்கிறது என்றே கூறுவேன்.” என தெரிவித்தார்.

Prabhu Soundar:

This website uses cookies.