இந்த இந்திய வீரர்கள் தான் ஒருநாள் தொடருக்கான சிறந்த வீரர்கள் ; கருத்து தெரிவித்த தினேஷ் கார்த்திக் மற்றும் ஷான் பொல்லாக் !!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில், வர்ணனையாளராக திகழ்ந்த தினேஷ் கார்த்திக் மற்றும் ஷான் பொல்லாக் ஆகிய இருவரும் ஒருநாள் தொடருக்கான சிறந்த பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டரை தேர்ந்தெடுத்துள்ளனர்.

இந்தியா வந்துள்ள விண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்திருந்தது, இந்த எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 46 ஓவர்களிலேயே 10 விக்கெட்டையும் இழந்து 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியை தழுவியது இதன் மூலம் இந்திய அணி ஒருநாள் தொடரை 2-0 என வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

இந்த நிலையில் போட்டியின் இடையே வர்ணனையாளராக இருந்த தினேஷ் கார்த்திக் மற்றும் ஷான் பொல்லாக் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் சிறந்த வீரர்கள் குறித்து தங்களுக்கு மத்தியில் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

அதில் இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக், ஒருநாள் தொடருக்கான சிறந்த பேட்ஸ்மேன் என்ற லிஸ்டில் என்னுடைய மனதில் தோன்றுவது சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி தான், இந்த இருவரில் ஒருவரை தேர்ந்தெடுப்பது மிகவும் கடினம். அதேபோன்று சிறந்த பந்து வீச்சாளர் என்ற உடனேயே அணில் கும்ப்ளேவின் பெயர்தான் என் மனதில் தோன்றுகிறது. அனில் கும்ப்ளே தவிர்த்து ஹர்பஜன் சிங் மற்றும் ஜாகிர் கான் ஆகிய இருவரும் சிறந்த பந்துவீச்சாளர்கள் தான், இவர்களை அடுத்து சிறந்த ஆல்-ரவுண்டராக எனக்கு தோன்றுவது கபில்தேவ் தான் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தனது கருத்தை தெரிவித்த ஷான் பொல்லாக், பந்துவீச்சாளர்களில் ஜவகல் ஸ்ரீநாத் குறித்து என்ன நினைக்கிறீர்கள்..? அவரும் சிறப்பாக பந்து வீச கூடியவர், இவர்களை அடுத்து நீங்கள் கூறிய ஜாகீர்கான் பந்துவீச்சில் சிறந்தவர். ஆனால் அனில் கும்ப்ளே நீண்டநாட்களாக பந்துவீச்சில் தன்னுடைய அபார திறமையை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு பல வெற்றிகளை கொடுத்துள்ளார்.அதே போன்று நீங்கள் சிறந்த ஆல்ரவுண்டர்களில் கபில்தேவ்வை தேர்ந்தெடுத்தது சிறந்த தேர்வாகும் அவரைப் போன்று ஒரு ஆல்ரவுண்டரை நம்மால் பார்க்க முடியாது. அதே போன்று சிறந்த பேட்ஸ்மேன்களில் வரிசையில் நீங்கள் தேர்ந்தெடுத்த சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரையும் தவிர்த்து இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்த சேவாக்கும் என்னுடைய லிஸ்டில் உள்ளார் என்று ஷான் பொல்லாக் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.