ஷிகர் தவான் தனது கபடி பாணியிலான கொண்டாட்டம் குறித்தும் இதற்க்கு முன்னோடி யார், இந்தபாணி ரசிகர்களிடையில் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது அதற்க்கான காரணத்தையும் கூறியுள்ளார்.
கௌரவ் கபூர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்போடு விருந்தினராக கலந்துகொண்ட ஷிகர் தவான் தன் ரசிகர்கள் தன்னிடம் இதை விரும்புவதாகவும் வெளியில் பல இடங்களுக்கு செல்லும் பொழுது கூறிக்கொண்டே இருக்கிறார்கள் இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியழிக்கிறது என கூறினார்.
தனது ரசிகர்களால் “கப்பர்” ஷிகர் தவான்,”நான் முதன்முதலில் ஆஸ்திரேலியா எதிராக விளையாடுகயில் ஷான் வாட்சன் கேட்ச் பிடிக்கும் பொழுது இந்த மாதிரியான கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினேன். எனக்கு கபடி மிகவும் பிடித்தமான ஒன்று. அதனால் கூட இருக்கலாம். நான் என் முழு மனநிறைவோடு இதை செய்கிறேன். காலப்போக்கில் என் ரசிகர்களுக்கு இது பிடித்துபோக அதை நான் தொடர்கிறேன்” இவ்வாறு கூறினார்.
மேலும் அவர், இந்தியாவிற்கு ஆடவேண்டும் அதுதான் விதி என்றால் வாய்ப்புகள் என்னை தேடி வரும், ஒவ்வொருமுறையும் அணியில் இடம் பெறாமலோ ஆட முடியாமல் வெளியில் அமர்திருந்தாலோ நான் முயற்சிப்பேன் இல்லையெனில் கிரிக்கெட் மட்டுமே வாழ்கையில்லை எனது குடும்பமும் அதன் நலனும் எனக்கு மிகமுக்கியம். எனது சந்தோசத்திற்காகவும் அவர்களின் சந்தோசத்திற்காகவும் தன் இவ்வளவும். சந்தோஷமாக இருப்பதே எல்லாவற்றையும் விட முக்கியமான ஒன்று என கூறினார்.
இந்த ஐபில்லில் சன் ரைசெஸ் ஹைதராபாத் அணிக்காக அதிக ரன் குவித்தவர்களில் வில்லியம்சன் க்கும் அடுத்தபடியாக உள்ளார்.
ஒருநாள் டி20 போட்டிகளில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தாலும், டெஸ்ட் போட்டிகளில் எதிர்பார்த்த அளவிற்கு பெறிதாக ஜொலிக்க முடியவில்லை.
கே எல் ராகுல், முரளி விஜய் ஆகியோரின் இடத்தை பிடிக்க போராடிவருகிறார்.
ஜூன் 14ம் தேதி ஆப்கானிஸ்தான் அணியுடனான டெஸ்ட் போட்டியில் களமிறக்க படுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவெண்டும்.