மீண்டும் இந்திய டெஸ்ட் அணிக்குள் நான் நுழைந்வேன்! சபதம் எடுக்கும் முன்னணி வீரர்!!
இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான். டெஸ்ட் போட்டிகளுக்கு மீண்டும் ஆடும் நம்பிக்கை இன்னும் எழும்பவில்லை வில்லை எனவும் எப்படியாவது மீண்டும் இந்திய அணிக்குள் வந்து தனது இடத்தை பிடிப்பேன் எனவும் பேசி இருக்கிறார்.
2013ம் ஆண்டு அதிரடியாக விளையாடி வரலாற்று சிறப்புமிக்க முறையில் தொடக்க போட்டியிலே 187 ரன்கள் அடித்து இந்திய அணிக்காக விளையாடியவர் ஷிகர் தவான். கடைசியாக 2018 ஆம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்தபோது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்தார்.
அதன் பின்னர் இவர் அணியில் இருந்து நீக்கப்பட்டு தற்போது துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் நன்றாக விளையாடா விட்டாலும் அடுத்தடுத்து கேஎல் ராகுல், ப்ரீத்திவ் ஷா, சுப்மன் கில் போன்ற வீரர்கள் வரிசையாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.
எப்படி பார்த்தாலும் துவக்க இடத்தை பிடிப்பதற்கு பெரும் போட்டி இருக்கிறது. இப்படி இருந்தாலும் துவக்க இடத்தைப் பிடிப்பதற்கு நான் எனது மனதை விட்டு விடவில்லை எனவும், எப்போதும் நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் ஷிகர் தவான்.
அவர் கூறுகையில் “நான் தற்போது டெஸ்ட் அணியில் இல்லை என்பதால் மீண்டும் அணிக்குள் வருவதற்கான நம்பிக்கையை நான் விட்டுவிட்டேன் என்று அர்த்தம் கிடையாது. எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நான் மீண்டும் என்னை நிரூபிப்பேன். கடந்த முறை ஐந்து கோப்பை தொடரில் சதம் அடித்து இருந்தேன்.
அதனை வைத்து மீண்டும் ஒருநாள் அணியில் இடம் பிடித்து மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் ஏன் நான் வரக்கூடாது கண்டிப்பாக வருவேன். டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பேன் தொடர்ந்து என்னுடைய மிகச்சிறந்த ஆட்டங்களை காண்பித்து கொண்டிருப்பேன்.
அடுத்த வருடம் டி20 உலக கோப்பை வரவிருக்கிறது. எனக்கு ஒரே ஒரு வேலைதான் தொடர்ந்து நான் நன்றாக ஆடிக் கொண்டிருக்க வேண்டும் அவ்வளவுதான். அரங்கில் தொடர்ந்து வந்துகொண்டே இருக்க வேண்டும். இதனை செய்து கொண்டே இருந்தால் தானாகவே எனது இடம் அணியில் கிடைத்துவிடும்” என்று தெரிவித்திருக்கிறார்.
தற்போது வரை 34 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடி இருக்கும் ஷிகர் தவான் 2315 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் சதங்களும் பல அரை சதங்களும் அடங்கும்.