அச்சுஅசலாக தோனியை போல.. தவானுக்கு முடி வெட்டிவிட்ட அவரது மகன்! இணையத்தை கலக்கும் போட்டோ உள்ளே..
தனது மகனுக்கு தோனியைப்போலவே முடி வெட்டியுள்ள தவான் தானும் மகனிடம் முடிவெட்டிக்கொண்டார். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ளது. இதனால் வீரர்கள் பலர் தங்களது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். பயிற்சிக்கும் செல்ல இயலாத சூழல் உள்ளது.
அவ்வப்போது சமூகவலைத்தளத்தில் நேரலை மூலமாக உரையாடி வருகின்றனர். ஆனால் இந்திய அணியின் துவக்க வீரர் ஷிக்கர் தவான் தனது மகனுடன் வீட்டிலேயே செம்ம லூட்டி அடித்து வருகிறார்.
அண்மையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும், இரண்டு மாதகாலமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் முடி வெட்டும் கடைகள் திறக்கப்படவில்லை. பிரபலங்கள் பலர் வீட்டிலேயே மனைவி மற்றும் உறவினர்கள் உதவியும் தனக்கும் தங்களது குழந்தைகளுக்கும் முடி வெட்டுவதை இணையம் வாயிலாக நம்மால் பார்க்க முடிந்தது.
தற்போது, ஷிகர் தவான் தனது மகனுக்கு வீட்டிலேயே முடி வெட்டி, தானும் மகனிடம்முடி வெட்டிக்கொண்டார். அதன் காணொளியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மகனின் ஹேர்ஸ்டைல் தோனியின் ஹேர்ஸ்டைல் போல உள்ளது என பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள தவான், ‘‘நீங்களும் என் மகன் போல உங்கள் வீட்டில் இருக்கும் செல்லக் குழந்தைகளுடன் முடித்திருத்தும் செய்துகொள்ளுங்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஷிகர் தவான் தனது மகனுடன் டான்ஸ் ஆடி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதற்கு வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் லாரா நகைச்சுவை எமோஜி போட்டிருந்தார். அதை ஷிகர் தவானும் லைக் செய்திருந்தார்.