ஆப்கன் அணியை அடித்து துவம்சம் செய்த தவான் டெஸ்ட் தரவரிசையில் வாழ்நாள் சாதனை!!
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஆப்கன் அணிக்கெதிரான வரலாற்று சிறப்பு மிக்க டெஸ்ட் போட்டிக்கு பிறகு சிக தவான் தனது வாழ்நாளில் சிறந்த டெஸ்ட் தரத்தை அடைந்துள்ளார்.டெஸ்ட் பேட்டிங் தர வரிசையில் இதுவரை அவர் பிடிக்காத 24வது இடத்தை பிடித்துள்ளார் சிகர் தவான்.
இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய ஷிகர் தவண் 87 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 18 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். மதிய உணவு இடைவேளையில் இந்திய அணி 27 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 158 ரன்கள் எடுத்தது. ஷிகர் தவண் 104, முரளி விஜய் 41 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதன் மூலம் முதல் நாளில் மதிய உணவு இடைவேளைக்கு முன்னதாக சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும், உலக அளவில் 6-வது வீரர் என்ற சாதனையை யும் படைத்தார் ஷிகர் தவண். சேவக் கடைசியாக 2006-ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக மதிய உணவு இடைவேளைக்கு முன்னதாக 99 ரன்கள் எடுத்திருந்ததே இந்திய வீரர்களில் அதிகபட்ச சாதனையாக இருந்தது.
உணவு இடைவேளைக்கு பிறகு தொடர்ந்து விளையாடிய ஷிகர் தவண் மேற்கொண்டு 3 ரன்கள் எடுத்த நிலையில் யாமின் அகமதுஸாய் பந்தில், சிலிப் திசையில் முகமது நபியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஷிகர் தவண் 96 பந்துகளில் 107 ரன்கள் சேர்த்தார்
தவானுக்கு முன்பாக 5 பேர் இந்தச் சாதனையை படைத்துள்ளனர். தவான் 6வது நபர். இதற்கு முன்பாக 2017ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் இந்த மைல்கல்லை எட்டி இருந்தார். முதன் முதலாக இந்தச் சாதனையை ஆஸ்திரேலிய வீரர் விக்டர் ட்ரம்பர் 1902ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நிகழ்த்தினார்.
உணவு இடைவேளைக்கு முன்பு சதம் அடித்த வீரர்கள்:-
விக்டர் ட்ரம்பர் (ஆஸ்திரேலியா) – 1902
சார்லி மகர்ட்னே (ஆஸ்திரேலியா) – 1921
டான் பிராட்மேன் (ஆஸ்திரேலியா) – 1930
மஜித் கான் (பாகிஸ்தான்) – 1976
டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) – 2017
ஷிகர் தவான் (இந்தியா) – 2018