ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது கைவிரலில் காயம் அடைந்த ஷிகர் தவானுக்கு இன்று மருத்துவ பரிசோதனை நடத்தப்பட இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான். இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் அபார சதமடித்தார். இந்தப் போட்டியின்போது, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் நாதன் கோல்டர் நைல் வீசிய பந்து, தவானின் இடது கை பெருவிரலில் பலமாக தாக்கியது. அப்போதே பிசியோதெரபிஸ்ட் வந்து அவருக்கு சிகிச்சை அளித்தார். இருந்தாலும் வலியுடன் விளையாடிய தவான், சதம் அடித்தார்.அந்த விரல் கடுமையாக வீங்கியதை அடுத்து, அவர் பீல்டிங் செய்ய வரவில்லை. ஜடேஜா அவருக்குப் பதில் பீல்டிங் செய்தார்.
இந்நிலையில் அவர் கைவிரலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ஸ்கேன் செய்து பார்க்கப்பட இருக்கிறது. இந்திய அணி, அடுத்து நியூசிலாந்து அணியை வரும் 13 ஆம் தேதி எதிர்கொள்கிறது. அதற்குள் அவர் காயம் குணமாகிவிடும் என்று கூறப்படுகிறது.
ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் பந்தை உப்புக் காகிதம் வைத்து தேய்த்த குற்றத்திற்காக ஓராண்டுகாலம் தடை செய்யப்பட்டு மீண்டும் ஆஸ்திரேலியாவுக்காக ஆடவந்துள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் இருவரையும் ரசிகர்கள் கடும் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர், குறிப்பாக இங்கிலாந்து ரசிகர்கள் இருவரையும் கடுமையாக கேலி செய்தனர். அப்போதெல்லாம் யாரும் ரசிகர்களைக் கண்டிக்கவில்லை.
நேற்றைய இந்திய-ஆஸ்திரேலிய ஆட்டத்திலும் இந்திய ரசிகர்களில் ஒரு பகுதியினர் ஸ்மித்தை பால் டேம்பரிங்கை வைத்து கடுமையாக கேலியும் கிண்டலும் செய்து வந்தனர்.
ஸ்மித் அப்போது பீல்ட் செய்து கொண்டிருந்தார். விராட் கோலி பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.
ரசிகர்களின் ஸ்மித் மீதான கேலியும் கிண்டலும் அதிகரிக்க வெறுப்படைந்த விராட் கோலி ரசிகர்களை நோக்கி கையை அசைத்து ‘நிறுத்தங்கள்.. வேண்டாம்.. என்ன இது? ஸ்மித்தைக் கைகாடி அவருக்குக் கைத் தட்டுங்கள்’ என்று கூறி ரசிகர்களை திருத்தினார் விராட் கோலி.
இதனையடுத்து நெகிழ்ச்சியடைந்த ஸ்மித் விராட் கோலிக்கு கையை கொடுத்து அவரது முதுகில் தட்டிக் கொடுத்தார்.
இது ஆஸ்திரேலிய ஊடகத்தினர் கவனத்தைக் கவர்ந்து கோலியின் கிளாஸி ஸ்போர்ட்ஸ்மென்ஷிப் என்று செய்தி வெளியிட்டுள்ளனர்.
ஸ்மித் வார்னரை ரசிகர்கள் கிண்டல் செய்த இதுவரை எந்த அணியின் தலைவரும் களத்தில் இவ்வாறு ரசிகர்களைக் கண்டித்ததில்லை, இதில் விராட் கோலியின் இமேஜ் பலபடி உயர்ந்துவிட்டது