தற்பொழுது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இவர்கள் இருவரும் இங்கிலாந்தில் இருக்கின்றனர். இங்கிலாந்துக்கு எதிராக நடக்க இருக்கின்ற டெஸ்ட் தொடரில் இவர்கள் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர், ஷிகர் தவான் இந்திய அணி இருந்து எப்பொழுதும் வெளியேறி விடக்கூடாது என்று வேண்டுகோள் வைத்துள்ளார். மேலும் ஷிகர் தவான் குறித்து நிறைய விஷயங்களை அண்மையில் அவர் பேசியுள்ளார்.
இந்திய அணிக்கு மிகப்பெரிய பங்களிப்பை அவர் வழங்கியிருக்கிறார்
கடந்த ஆண்டுகளில் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் ஷிகர் தவான் மிக அற்புதமாக விளையாடி இருக்கிறார். இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இவர்கள் இருவரின் பெயர் ஷிகர் தவன் பெயரை மறைத்து விடுகிறது. ஆனால் உண்மையில் இவர்கள் இருவருக்கும் ஈடுகொடுக்கும் வகையில் அவர் இந்திய அணிக்காக நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கிறார். குறிப்பாக ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு பலநேரங்களில் அவர் துணை நின்று இருக்கிறார்.
ஐசிசி சர்வதேச தொடர்களில் ஷிகர் தவான் விளையாடும் விதம் பற்றி புதிதாக எதுவும் கூறத்தேவையில்லை. மிக அற்புதமாக ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடும் ஆற்றல் அவரிடம் தற்போது கூட இருக்கிறது.
நடக்க இருக்கின்ற உலக கோப்பை டி20 தொடரில் அவர் விளையாட வேண்டும்
இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 85 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு துணை நின்றுள்ளார். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஐபிஎல் தொடர்களில் மிக அபாரமாக விளையாடி வருகிறார். எனவே அவரை இந்திய அணியில் இருந்து எந்த நேரத்திலும் வெளியேற்றி விடக்கூடாது. மேலும் நடக்க இருக்கின்ற உலக கோப்பை டி20 தொடரில் அவரது பெயர் இடம்பெற வேண்டும்
ஓபனிங் வீரராக ரோகித் சர்மா நிச்சயமாக விளையாடப் போகிறார். அவருடன் இணைந்து விளையாட போகும் வீரர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. கே எல் ராகுல், பிரித்வி ஷா ஒரு பக்கம் தயாராக இருக்கின்றனர். மேலும் விராட் கோலி ஓபனிங் விளையாடவும் அதிக வாய்ப்பு உள்ளது.
சூழ்நிலையை பொருத்து ஓபனிங் வீரர் யார் என்பது முடிவாகும். ஆனால் எந்த நேரத்திலும் சிக்கல் அவன் பெயர் இந்திய அணியின் வீரர்கள் பட்டியலில் இருந்து எடுத்து விடக்கூடாது. நடக்க இருக்கின்ற உலக கோப்பை டி20 தொடர் அதேபோல 2023 ஆம் ஆண்டு நடக்க இருக்கின்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரிலும் அவரது பெயர் வீரர்கள் பட்டியலில் இடம் பெற வேண்டும் என்று இறுதியாக வாசிம் ஜாபர் கூறி முடித்தார்.