தென்னாப்பிரிக்கா அணி அடுத்ததாக பாகிஸ்தான் அணியுடன் மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் 3 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது.
இதற்காக இரு அணியினரும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். தென்னாப்பிரிக்கா அணியுடனான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி தேர்வு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் கருத்து தெறிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் பாகிஸ்தான் அணி தேர்வில் ஏன் ஸ்பின் ஆல்ரவுண்டர் இமாத் வாசிமை தேர்வு செய்யவில்லை என்று கேள்வி கேட்டு இருக்கிறார். பாகிஸ்தான் அணியின் நட்சத்திர ஸ்பின் ஆல்ரவுண்டர் இமாத் வாசிம் தனது அணிக்காக சிறப்பாக விளையாடி பல்வேறு வெற்றுகளை பெற்று தந்து இருக்கிறார். அப்படி இருக்கும் இவரை ஏன் அணியில் தேர்வு செய்யவில்லை என்று கேட்டுள்ளார் சோயிப் அக்தர்.
பாகிஸ்தான் டி20 அணி:
பாபர் அசாம்(கேப்டன்), ஷதாப் கான், ஷர்ஜீல் கான், முகமது ஹஃபீஸ், ஹைதர் அலி, டனிஷ் அஜீஸ், ஆசிஃப் அலி, முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், முகமது வாசிம், முகமது ரிஸ்வான், சர்ஃபராஸ் அகமது, ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ராஃப், முகமது ஹஸ்னைன், ஹசன் அலி, அர்ஷத் இக்பால், உஸ்மான் காதிர்.
பாகிஸ்தான் ஒருநாள் அணி:
பாபர் அசாம்(கேப்டன்), இமாம் உல் ஹக், ஃபகார் ஜமான், அப்துல்லா ஷாஃபிக், ஹைதர் அலி, டானிஷ் அஜீஸ், சௌத் ஷகீல், ஃபஹீம் அஷ்ரஃப், முகமது வாசிம், ஷதாப் கான், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான் சர்ஃபராஸ் அகமது, ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ரௌஃப், ஹஸ்னைன், ஹசன் அலி, உஸ்மான் காதிர்.