வீடியோ; ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து மாஸ் காட்டிய இளம் வீரர் !!

வீடியோ; ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து மாஸ் காட்டிய இளம் வீரர்

ரஞ்சி தொடருக்கான மும்பை அணியின் சிவம் டூப் என்னும் இளம் வீரர் ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து அசத்தியுள்ளார்.

12வது ஐபி.எல் டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் ஜெய்ப்பூரில் இன்று  நடக்கிறது. இந்த ஏலத்தில் பங்கேற்க 1,003 வீரர்கள் பதிவு செய்தனர். இதில் தங்களுக்கு தேவையான வீரர்களின் பெயர்களை அணி நிர்வாகங்கள் ஐ.பி.எல். நிர்வாகத்துக்கு அளித்தன.

அணிகள் தேர்வுசெய்து மொத்தம் 346 வீரர்கள் அடங்கிய இறுதிப் பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதிலிருந்து 70 வீரர்கள் மட்டுமே ஏலம் மூலம் அணிகளுக்காக தேர்வு செய்யப்படுவார்கள்.

ஏலம் நாளை பகல் 2.30 மணிக்குத் தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் இதனை நேரடி ஒளிப்பரப்பு செய்கிறது.

மும்பை அணி பாட் கம்மின்ஸ், ஜே.பி. டுமினி, முஸ்தபிசூர் ரஹ்மான், அகிலா தனஞ்சயா உள்ளிட்ட வீரர்களை அணியிலிருந்து நீக்கியுள்ளது. பெங்களூரு அணியிலிருந்து டிகாக்கை வாங்கியுள்ளது. ஏலத்தில் அதிகபட்சம் ரூ.11.15 கோடிக்கு 1 வெளிநாட்டு வீரர் மற்றும் 6 இந்திய வீரர்களை எடுக்கலாம்.

ராஜஸ்தான் அணி டாசி ஷார்ட், பென் லாப்லின், ஹின்ரிச் கிலாசன், உனத்கன்ட், துஷ்யந்த சமீரா உள்ளிட்ட வீரர்களை அணியிலிருந்து நீக்கியுள்ளது. ஏலத்தில் அதிகபட்சம் ரூ.20.95 கோடிக்கு 3 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 6 இந்திய வீரர்களை எடுக்கலாம்.

ஹைதராபாத் அணி சச்சின் பேபி, விருத்திமான் சஹா, கிறிஸ் ஜோர்டான், பிராத்வெயிட், அலெக்ஸ் ஹேல்ஸ், மெஹிதி ஹசன் உள்ளிட்ட வீரர்களை அணியிலிருந்து நீக்கியுள்ளது. அபிஷேக் சர்மா, விஜய் சங்கர், ஷபாஸ் நதீம் ஆகியோருக்குப் பதிலாக ஷிகர் தவானை டெல்லி அணிக்கு விட்டுக்கொடுத்துள்ளது. ஏலத்தில் அதிகபட்சம் ரூ.9.70 கோடிக்கு 3 இந்திய வீரர்கள் மற்றும் 2 வெளிநாட்டு வீரர்களை எடுக்கலாம்.

சென்னை அணி மார்க் உட், கனிஷ்க் சேத் ஷிடிஸ் சர்மா ஆகிய வீரர்களை அணியிலிருந்து நீக்கியுள்ளது. ஏலத்தில் அதிகபட்சம் ரூ.8.40 கோடிக்கு 2 இந்திய வீரர்களை மட்டும் எடுக்கலாம்.

ஐ.பி.எல் ஏலம் இன்று நடைபெற  உள்ள நிலையில், ரஞ்சி தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணியை சேர்ந்த சிவம் டூப் என்னும் இளம் வீரர் ஒருவர் ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் விளாசி அசத்தியுள்ளார்.

வீடியோ;

சிவம் நியூப் ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து மாஸ் காட்டியது இன்று நடைபெறும் ஐ.பி.எல் ஏலத்தில் அவருக்கு சாதகமாக அமையும் என தெரிகிறது. சிவம் டூப்பிற்கு அனைத்து அணிகளும் போட்டி போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Mohamed:

This website uses cookies.