தற்பொழுது உள்ள கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் அனைத்து வகை கிரிக்கெட் பார் மட்டங்களிலும் மிக சிறப்பாக விளையாடி மொத்தமாக 70 சர்வதேச சதங்களை விராட் கோலி குவித்து வைத்திருக்கிறார். இன்னும் ஒரு சதம் அடித்தால் ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்து சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் அதிக சதங்கள் குறித்த இரண்டாவது வீரராக புதிய சாதனையை அவர் படைத்து விடுவார்.
முதல் இடத்தில் 100 சர்வதேச சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் இருக்கிறார். அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் இருக்கும் ஒரே கேள்வி விராட் கோலி தனது கிரிக்கெட் கேரியரை முடிக்கும் பொழுது 100 சதங்களை குவித்து விடுவாரா என்பதுதான். தற்பொழுது அதற்கு பதிலளிக்கும் வகையிலும், விராட் கோலி மற்றும் பாபர் அசாம் இணைத்துப் பேசப்படுவது குறித்தும் சோயப் அக்தர் ஒரு சில விஷயங்களை கூறியிருக்கிறார்.
விராட் கோலி குறைந்தபட்சம் 120 சர்வதேச சதங்களை குவிக்க வேண்டும்
விராட் கோலியை தற்போது 70 சர்வதேச சதங்களை குவித்து வைத்திருக்கிறார். நிச்சயமாக இனி வரும் ஆண்டுகளில் அவர் மிக அற்புதமாக விளையாடுவார் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. 100 சர்வதேச சதங்கள் அவர் நிச்சயமாக குவித்து விடுவார். ஆனால் அது பத்தாது என்றும் குறைந்தபட்சம் அவர் 110 முதல் 120 சர்வதேச சதங்கள் குவிக்க வேண்டும் இன்றும் தற்போது சோயாப் அக்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாபா அசாம் தற்பொழுது தான் வளர்ந்து வருகிறார், பத்து வருடங்கள் கழித்து பேசிக் கொள்ளலாம்
26 வயதே ஆன பாபர் அசாம் தற்போது தனது கிரிக்கெட் கேரியரில் 20 சர்வதேச சதங்கள் குவித்து வைத்திருக்கிறார். இன்னும் அவருக்கு நீண்ட பயணம் இருக்கிறது. தற்பொழுது அவர் விராட் கோலியின் சாதனைகளை முறியடித்து விடுவாரா என்று கேட்டாள் அந்த கேள்வியே முதலில் தவறு. விராட் கோலி எங்கேயோ இருக்கிறார்.
எனவே இன்னும் பத்து வருடங்கள் கழித்து தான் பாபர் அசாமை விராட் கோலியுடன் இணைத்து அல்லது ஒப்பிட்டுப் பேச வேண்டும். மேலும் இன்னும் 10 வருடங்கள் கழித்து பாதரசம் எவ்வளவு சர்வதேச சதங்களை குவித்து வைத்திருக்கிறார் என்பதை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். தற்போதைக்கு விராட் கோலியை பாபர் அசாம் உடன் இணைத்து அல்லது ஒப்பிட்டு பேசுவது சரியல்ல என்றும் இறுதியாக சோயப் அக்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.