இவங்கள பார்த்து கத்துக்கங்க; பாகிஸ்தான் அணிக்கு முன்னாள் ஜாம்பவான் அட்வைஸ்
விராட் கோலியின் அணுகுமுறையை பாகிஸ்தான் அணியினர் கவனிக்க வேண்டும் ஷோயப் அக்தர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தர். இவர் தனது யூடியூபில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியை பின்பற்றவும், விராட் கோலி அணியை வழிநடத்தும் வழியை பின்பற்றவும் பாகிஸ்தானுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
“இந்திய அணி வளர்ச்சி அடைவதை நான் காண்கிறேன். பாகிஸ்தானில் ஆக்ரோஷமான கிரிக்கெட் விளையாடுவதற்கான ஒரு கோட்டை இருந்தது, ஆக நாங்கள் பயப்படாமல் இருந்தோம். நாங்கள் ஆக்ரோஷமாக இருந்தோம், சண்டைக்கு தயாராக இருந்தோம். எங்கள் கேப்டனை இந்தியாவின் கேப்டனுடன் ஒப்பிடுவோம்”என்று அக்தர் தனது யூடியூப் சேனலில் கூறினார்.
“மிஸ்பா மற்றும் அசார் இருவரும் பாகிஸ்தானின் அணியை சிறந்ததாக மாற்றுவதற்கு வழிகளைக் ஏற்படுத்த வேண்டும். விராட் கோலி வகுக்கும் பாதையைவிட அந்தப் பாதை சிறப்பாக இருக்க வேண்டும்” என்று கூறினார். மேலும் இவர் இதே வீடியோவில் இந்திய கிரிகெட்டில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியதற்காக கோலியை பாராட்டியும் உள்ளார்.
“விராட் கோலி தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். அவரை அவரது அணி முழுமையாகப் கவனிக்கிறது. கேப்டன் சுறுசுறுப்பாகவும் தரமாகவும் அமைந்தால், அவரை அப்படியே வெளிப்படையாகவே பின்பற்றுவார்கள். இம்ரான் கான் கேப்டனாக இருந்தபோது இதே விஷயம் எங்கள் அணிக்குள் இருந்ததாக நான் நம்புகிறேன். அவர் மைதானத்திற்கு வந்ததும், வேறு யாருக்கும் செவிசாய்க்க மாட்டோம்”என்று அக்தர் கூறியுள்ளார்.