டி20 தொடரில் சதம் அடிப்பதை விராட் கோலி மறந்து விட வேண்டியதுதான் என்று சோகிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
சமகால கிரிக்கெட்டின் முடி சூடா மன்னாக திகழ்ந்து வந்த விராட் கோலி, கிட்டத்தட்ட கடந்த இரண்டு வருடங்களாக பேட்டிங்கில் மிக மோசமாக செயல்பட்டு வருகிறார். இதனால் மிக கடுமையான விமர்ச்சனங்களையும் விராட் கோலி எதிர்கொண்டு வந்தார்.
இந்திய அணியின் அசைக்க முடியாக நம்பிக்கையாக திகழ்ந்து வந்த விராட் கோலி அடுத்தடுத்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்திய அணியில் இருக்கும் முக்கியத்துவத்தை பிசிசிஐ கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வந்தது.
குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சொதப்பாலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் விண்டீஸ் அணிக்கு எதிரான விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. கிரிக்கெட் தொடரில் எழுபதாவது சதத்தை அடித்து ஆயிரம் நாளை தொட்டுவிட்டதால் விராட் கோலி சச்சின் டெண்டுல்கரின் சாதனையான 100 சதத்தை நெருங்குவாரா..? மாட்டாரா..? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.
தன்னுடைய 70 ஆவது சதத்திற்கு முன் நிச்சியம் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இன்னும் சில வருடங்களில் முறியடித்து விடுவார் என்று பேசப்பட்டு வந்திருந்த நிலையில், சதம் அடித்தே இரண்டு வருடம் முடிவடைந்து விட்டதால் விராட் கோலிக்கு முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் குறித்தும் இந்திய அணி வீரர்கள் குறித்தும் ஆக்டிவாக பேசி வரும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகம் பந்துவீச்சாளர் சோகிப் அக்தர், விராட் கோலி சதத்தில் சதம் அடிக்க வேண்டுமேன்றால் டி20 போட்டியில் கவனம் செலுத்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அக்தர் பேசியதாவது, “தற்போது விராட் கோலி பந்தை மிடில் பேட்டில் நன்றாக எதிர்கொள்வதற்கு சிரமப்படுகிறார், ஆசிய கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு வரும் விராட் கோலி இதனை அப்படியே தொடர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன், ஆனால் விராட் கோலிக்கு நான் கூறும் அறிவுரை, t20 உலக கோப்பை தொடர் வரை பொறுமை காக்க வேண்டும் என்பதுதான், டி20 தொடர் உங்களுக்கு பொருந்தினாலும் சரி அல்லது பொருந்தவில்லை என்றாலும் சரி அதில் கவனம் செலுத்தாமல் நீங்கள் 30 சதங்களை அடிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துங்கள். சமகாலத்தின் சிறந்த பேட்ஸ்மேன் என்று உங்களை நீங்களே தேற்றி கொள்ளுங்கள். நிச்சயம் எதிர்வரும் முப்பது சதங்களும் மிக கடினமான ஒன்றாக இருக்கிறது, ஆனால் இந்த சதத்தை டி20 போட்டிகளில் உங்களால் அடிக்க முடியாது, நிச்சயம் நீங்கள் இந்த சாதனையை முறியடிக்க வேண்டும் என்றால் லாங்கர் பார்மட்டில்தான் (LONGER FORMAT) முயற்சி செய்ய வேண்டும், டி20 தொடரில் நீங்கள் முயற்சி செய்கிறீர்கள் என்பது தெரியும் ஆனால் அதில் போதுமான நேரங்கள் கிடையாது, டி20 தொடரில் நல்ல ஸ்ட்ரைட் ரைட்டை மெயின்டைன் செய்து அணியை வெற்றி பெற செய்தாலே போதுமானது. விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் சாதனையான நூறு சதங்களை அடிக்க வேண்டும் என்று நானும் ஆசைப்படுகிறேன், தற்போதைய நிலையில் அது சாத்தியமில்லை என்று தோன்றினாலும், விராட் கோலிக்கு அதை செய்வதற்கான திறமை உள்ளது” என்று அத்த பேசியிருந்தது குறிப்பிடப்பட்டது