பிரபல பத்திரிகையாளர் ஷோபா டி, இந்திய பெண்கள் மற்றும் ஆண்கள் கிரிக்கெட் அணி மீதான சர்ச்சைக்குரிய கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதற்காக ரசிகர்களும் பிரபலங்களும் அவரின் ட்விட்டர் பக்கத்தில் தங்களது எதிர்ப்பினை பதிவு செய்து அவரை சாடி வருகின்றனர்.
கடந்த ரியோ ஒலிம்பிக் பெட்டிகளின் போது ஷோபா டி தான் இந்திய ஒலிம்பிக் வீரர்களை பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து சிக்கலில் மாட்டிக் கொண்டார். அதனை தொடர்ந்து தற்போது இந்தியா பெண்கள் கிரிக்கெட் அணியை பற்றி தற்போது தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்ற பெண்கள் உலகக்கோப்பையில் இந்திய பெண்கள் அணி 12 வது அணியாக நுழைந்து உலகக்கோப்பையில் இறுதி வரை சென்று தோல்வியை தழுவியது. இந்திய பெண்கள் அணியின் இந்த சிறப்பான செயல்பாடு காரணமாக பிரபலங்களும் பல தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். பல பொதுத்துறை நிறுவனங்கள் ரொக்க பரிசினையும் அவர்களுக்கு வேலை வாய்ப்பினையும் வழங்கியது.
உச்சமாக பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த வீராங்கனை ஹர்மன்பிரீட் கவுருக்கு அம்மாநில அரசு DSP பதவியை வழங்கியது. இது போன்ற பரிசுகளையும் பாராட்டுக்கையும் தேவையற்றது என்று விமர்சனம் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஷோபா டி. இது தற்போது சர்ச்சைகுள்ளாகியுள்ளது.
அவர்களுக்கு கொடுக்கப்படும் இந்த சலுகைகளும், பரிசுகளும் தேவையற்றது மற்றும் அவை அனைத்தும் வீராங்கனைகளின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு கேடு விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது.
மேலும், இவ்வாறு அளிக்கப்பட்ட சலுகை மற்றும் பரிசுகளினால் தான் ஆண்கள் கிரிக்கெட் அணி வீரர்கள் சீரழிந்து உள்ளனர், எனவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் பதிவிட்டதாவது, “ஓ கடவுளே இந்த அற்புதமான பெண் மணிகளை இந்த விளம்பர உலகத்தில் இருந்து காப்பாற்றும், இந்த பேராசையே நமது ஆண்கள் அணியில் பலர் வாழ்க்கையை வீணாககப்பட்டது”
அதனை தொடர்ந்து பலரும் அவரது கருத்தை விமர்சித்த வண்ணம் உள்ளனர்.
” பலரும், ஏன் ஆண்களுக்கு இணையாக சம்பாரித்தல் பொருக்கவில்லையா உங்களுக்கு ” எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அவைகளின் தொகுப்புகள் கீழே.