உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், பேட்டிங் செய்த போது ஷிகர் தவானுக்கு காயம் ஏற்பட்டது. அதனால், அடுத்த சில போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டது. அதிகாரப்பூர்வமாக அவர் அணியில் இருந்து விலக்கப்படவில்லை. இருப்பினும், ரிஷப் பண்ட்டை இங்கிலாந்துக்கு பிசிசிஐ அனுப்பியது.
காயம் குணமடைந்த பின்னர் ஷிகர் தவான் நிச்சயம் விளையாடுவார் என கேப்டன் விராட் கோலியும் தெரிவித்தார். தவான் விளையாடுவதற்கு மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். அதனால், தவான் ஓரிரு போட்டிகள் கழித்து மீண்டும் அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பேசப்பட்டது. தவானுக்கு பதில் கே.எல்.ராகுல் தொடக்க வீரராக களமிறங்கினார். அணியில் விஜய் சங்கர் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், உலகக் கோப்பை தொடரில் இருந்து ஷிகர் தவான் நீக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதுகுறித்த தகவலை பிசிசிஐ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. , “ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஓவல் மைதானத்தில் ஜூன் 5இல் நடைபெற்ற போட்டியில் தவானுக்கு இடது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது. ஜூலை மாதம் பாதி வரையில் தவானுக்கு காயம் இருக்கும் என சில சிகிச்சை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதனால், மீதமுள்ள உலகக் கோப்பை போட்டிகளில் அவர் வெளியேறுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷிகர் தவானுக்கு பதில் ரிஷப் பண்ட்-ஐ அணியில் சேர்க்க ஐசிசி-யிடம் வலியுறுத்தியுள்ளதாக பிசிசிஐ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பண்ட்-ஐ அணியில் சேர்ப்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.