இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்பதை மீண்டும் நிரூபணம்… ஒரே போட்டியில் பல சாதனைகள் பல படைத்த சுப்மன் கில்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த சுப்மன் கில், இந்த ஒரே போட்டியின் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 105 ரன்களும், சுப்மன் கில் 104 ரன்களும், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் 72 ரன்களும் எடுத்தனர்.
மிக சிறப்பான பேட்டிங்கின் மூலம் இந்திய அணியில் ஷிகர் தவானின் இடத்தை தட்டி பறித்த சுப்மன் கில், தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணிக்கான தனது பங்களிப்பை மிக சரியாகவே செய்து வருகிறார்.
சமீபத்தில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் மிக சிறப்பான வெளிப்படுத்தி பல்வேறு சாதனைகளை தன்வசப்படுத்தி வரும் சுப்மன் கில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் சதம் அடித்ததன் மூலமும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
இதுவரை இந்திய அணிக்காக 35 ஒருநாள் போட்டிகளில் விளையாடி அதில் 1900+ ரன்களை கடந்துள்ள சுப்மன் கில், இதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தங்களது முதல் 35 இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் ஹசிம் ஆம்லாவை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் தங்களது முதல் 35 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த டாப் 5 வீரர்கள்;
சுப்மன் கில் – 1900+ ரன்கள்
ஹசிம் அம்லா – 1844 ரன்கள்
பாபர் அசாம் – 1758 ரன்கள்
வான் டர் டூசன் – 1679 ரன்கள்
ஃப்கர் ஜமான் – 1642 ரன்கள்
அதே போன்று சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிவேகமாக 6 சதக்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் சுப்மன் கில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
இந்திய அணிக்காக அதிவேகமாக 6 சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியல்;
சுப்மன் கில் – 35 இன்னிங்ஸ்
ஷிகர் தவான் – 46 இன்னிங்ஸ்
ராகுல் – 53 இன்னிங்ஸ்
விராட் கோலி – 61 இன்னிங்ஸ்
கவுதம் கம்பீர் – 68 இன்னிங்ஸ்