இளம் வீரர் சுப்மன் கில்லுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது CEAT நிறுவனம்
இளம் இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லின் பேட் ஸ்பான்சர்சிப்பிற்காக பிரபல டயர் நிறுவனமான CEAT நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற 19வயதுகுட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் அபாரமாக விளையாடிய இளம் வீரர் சுப்மன் கில், தனது நேர்த்தியான ஆட்டம் மூலம் இளம் இந்திய அணியை இறுதி போட்டி வரை அழைத்து சென்றவர். இது மட்டுமல்லாமல் அந்த ஒரே தொடரில் பல சாதனைகள் புரிந்ததன் மூலம் கிரிக்கெட் உலகின் புகழ் உச்சிக்கே சென்றவர். இதன் மூலம் ஐ.பி.எல் தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சுப்மன் கில்லை அணியில் எடுத்து கொண்டது.
இந்நிலையில் சுப்மன் கில்லிற்கு மேலும் ஒரு அங்கீகாரமாக இவரது பேட் ஸ்பான்சர்சிப்பை பிரபல டயர் நிறுவனமான CEAT நிறுவனம் ஏற்றுள்ளது. இதற்காக சுப்மன் கில்லுடனும் CEAT நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் ரோஹித் சர்மா மற்றும் ரஹானே CEAT நிறுவனத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள சுப்மன் கில் இது தனக்கு கிடைத்த கவுரவம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ரோஹித் சர்மா, ராஹானே வரிசையில் CEAT நிறுவனம் என்னையும் இணைத்துள்ளது எனக்கு கிடைத்த கவுரவம். CEAT நிறுவனத்துடன் இணைந்துள்ளது மகிழ்ச்சி, நீண்ட காலம் CEAT நிறுவனத்துடன் பயணிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற 19வயதுகுட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் அபாரமாக விளையாடிய இளம் வீரர் சுப்மன் கில், தனது நேர்த்தியான ஆட்டம் மூலம் இளம் இந்திய அணியை இறுதி போட்டி வரை அழைத்து சென்றவர். இது மட்டுமல்லாமல் அந்த ஒரே தொடரில் பல சாதனைகள் புரிந்ததன் மூலம் அந்த தொடரின் தொடர் நாயகன் விருதையும் சுப்மன் கில் தட்டி சென்றது குறிப்பிடத்தக்கது.