தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அதற்கு முன்னதாக தென்னாபிரிக்க ஏ அணி இந்தியாவில் தற்போது விளையாடி வருகிறது. ஒரு நாள் மற்றும் நான்கு நாள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி இந்திய ஏ அணியை எதிர்த்து விளையாடும். இதற்காக இந்திய ஏ அணியை தற்போது தேர்வுக்குழு அறிவித்துள்ளது.
இந்தியா ஏ அணியை தேர்வு செய்வதற்காக தேர்வுக் குழு பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஞாயிற்றுக்கிழமை கூடியது.
முதல் நான்கு நாள் போட்டி செப்டம்பர் 9 முதல் திருவனந்தபுரத்திலும், இரண்டாவது போட்டி செப்டம்பர் 17 முதல் மைசூரில் நடைபெறும்.
இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியை அறிவித்துள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிக்கு இந்தியாவின் இளம் வீரர் சுப்மான் கில் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் கண்டிப்பாக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒரு இளம் வீரர் ஆவார்.
அந்த அணியில் இவர்களிடம் கொடுக்கப்படவில்லை இந்நிலையில் அவரது மனதை தேற்றும் விதமாக முதல் போட்டியில் இவர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டாவது போட்டிருக்கு விருத்திமான் சஹா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் அவர் தற்போது வரை ஒரு போட்டியில் கூட ஆடவில்லை அவரையும் ஆதரவளித்து மனதை தேற்றும் விதமாக கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிகிறது.
இளம் வீரர் சுப்மன் கில் முதல் ஆட்டத்திற்கு கேப்டனாகவும், இரண்டாவது ஆட்டத்திற்கு சஹாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அணிகள்:
முதல் போட்டிக்கு: சுப்மான் கில் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், அன்மோல்பிரீத் சிங், ரிக்கி பூய், அங்கீத் பாவ்னே, கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), கே கவுதம், ஷாபாஸ் நதீம், ஷார்துல் தாகூர், முகமது சிராஜ், துஷார் தேஷம்பாண்டே. பொது அரட்டை அரட்டை லவுஞ்ச்
2 வது போட்டிக்கு: பிரியங்க் பஞ்சால், அபிமன்யு ஈஸ்வரன், சுப்மான் கில், அன்மோல்பிரீத் சிங், கருண் நாயர், விருத்திமான் சஹா (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), கே கவுதம், குல்தீப் யாதவ், ஷாபாஸ் நதீம், விஜய் சங்கர், சிவம் யாதவ் துபே, உமேஷாம் யாதேவ். அவேஷ் கான்.