ரஞ்சி டிராபியில் பாட்டியாலாவில் நடைபெற்று வரும் ஆந்திரா – பஞ்சாப் இடையிலான ஆட்டத்தின் முதல் நாளில் 24 விகெட்டுக்கள் வீழ்ந்தன.
ஆந்திரா – பஞ்சாப் போட்டியில் முதல் நாளில் 24 விக்கெட்: சித்தார்த் கவுல் ஹாட்ரிக் சாதனை
ரஞ்சி டிராபியில் பாட்டியாலாவில் நடைபெற்று வரும் ஆந்திரா – பஞ்சாப் இடையிலான ஆட்டத்தின் முதல் நாளில் 24 விகெட்டுக்கள் வீழ்ந்தன.
ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் இன்று 7-வது சுற்று ஆட்டங்கள் தொடங்கியது. பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் பஞ்சாப் – ஆந்திரா அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஆந்திரா பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி அந்திரா முதலில் பேட்டிங் செய்தது. பஞ்சாப் அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆந்திரா பேட்ஸ்மேன்கள் திணறினார்கள். தொடக்க வீரர்கள் இருவரும் டக்அவுட்டில் வெளியேறினர். சித்தார்த் கவுல் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த ஆந்திரா 97 ரன்னில் சுருண்டது. சித்தார்த் கவுல் ஐந்து விக்கெட்டுகளும், சவுத்ரி 3 விக்கட்டும் வீழ்த்தினர்.
பின்னர் பஞ்சாப் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. ஆந்திராவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பஞ்சாப் பேட்ஸ்மேன்களும் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். சோயிப் முகமது கான், ஆஷிஷ் தலா ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்த பஞ்சாப் அணி 108 ரன்னில் சுருண்டது.
பின்னர் 11 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆந்திரா 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2-வது இன்னிங்சிலும் மளமளவென விக்கெட்டுக்களை இழந்தது. இன்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்துள்ளது. இன்றைய ஒரே நாளில் 24 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளன.