இப்போதெல்லாம் கிரிக்கெட் என்பது பணமழை ஆட்டம் ஆகிவிட்டதால் வாரியங்களும், ஐசிசியும் வீரர்களை பிழிந்து எடுக்கும் வகையில் தொடர்களை அமைத்து வருகின்றன. போதாதென்று தனியார் டி20 கிரிக்கெட் தொடர்கள் வேறு வீரர்களைக் களைப்படைய, வெறுப்படையச் செய்து வருகின்றன.
கிரிக்கெட்டை தங்களது வணிக மதிப்புகளுக்காக ஏதோ ‘மதிப்பு மிக்க’ ஆட்டம் போல் மார்க்கெட்டிங் ஏஜென்சிகள் இந்த ஆட்டத்தை மட்டுமே பரப்பி வருகிறார்கள்.
சமீபத்தில் கோலி கூட வீரர்கள் அதிகமாக கிரிக்கெட் போட்டிகளை ஆட வேண்டியுள்ளது ஆண்டில் 300 நாட்கள் மைதானத்தில்தான் இருக்கிறோம் என்று வீரர்கள் பற்றி கவலைகளை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் கபில்தேவ் இது குறித்துக் கூறும்போது, “நெருக்கமான தொடர்களினால் விரைவில் வீரர்கள் சோர்ந்து விடுகிறார்கள் என்றால் அவர்கள் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடாமல் இருக்கட்டும், கிளப்பை விட நாடுதான் முக்கியம் என்ற முடிவை எடுக்கட்டும்.
என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு டெஸ்ட் போட்டியுமே முக்கியம்தான். அப்படி டெஸ்ட் போட்டிகள் முக்கியமில்லை என்றால் அவர்கள் புள்ளிவிவரங்கள் பற்றி பேசக்கூடாது.
எதிரணியினரை மதிக்க வேண்டும், ஏனெனில் எந்த ஒரு கிரிக்கெட்டிலும் வெற்றி மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்” என்றார் கபில்தேவ்.
2008ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை மொத்தம் 12 ஐபிஎல் போட்டிகள் நடந்துள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறையும், மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் ஒரு முறையும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒருமுறையும், அதே ஹைதராபாத் அணி முன்னதாக டெக்கான் சார்சஸ் என்ற பெயரில் இருக்கும்போது ஒருமுறையும் வென்றுள்ளது.
இந்த 12 ஆண்டுகளில் ஒரு முறை கூட கோப்பை வெல்லாத அணியாக கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இருக்கின்றன. இதில் பலமாக இருந்தும் பரிதாபமாக வெளியேறும் அணி பெங்களூர் தான்.
இத்தனைக்கும் இந்திய அணியின் கேப்டனாக வெற்றிகளை வாரிக்குவிக்கும் விராட் கோலி தான் பெங்களூர் அணியின் கேப்டனாக இருக்கிறார். ஆனாலும் கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் கடைசி இடத்தை பிடித்தது பெங்களூர். அந்த அணியின் தோல்வியை பார்த்த மற்ற ரசிகர்கள் கூட, ஒருமுறை ஜெயித்துக்கொள்ளட்டுமே என இறக்கப்படும் அளவிற்கு பெங்களூரின் நிலைமை மோசமடைந்தது.