டி20 தரவரிசையில் நம்பர் 2 இடத்திற்கு சூர்யகுமார் யாதவ் முன்னேற்றம்! நம்பர் 1 க்கும் இவருக்கும் எவ்வளவு புள்ளிகள் வித்தியாசம் தெரியுமா?

டி20 தரவரிசை பட்டியல் வெளியானது சூரியகுமார் யாதவ் பேட்டிங் தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.

இந்திய அணியின் நம்பர் 4 இடத்திற்கான தேடுதலில் கிடைத்த வைரம் சூரியகுமார் யாதவ். இங்கிலாந்து டி20 தொடர், வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர், ஆசியகோப்பைத் தொடர், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடர் தற்போது நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடர் என தொடர்ச்சியாக இந்த ஆண்டு சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறார்.

சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு ஆண்டில் இந்திய அணிக்கு அதிக ரன்கள் அடித்தவர் என்ற பெருமையையும் தன் வசப்படுத்தினார். சிக்கிர் தவானும் சாதனையை முறியடித்து, சூரியகுமார் தற்போது முதல் இடத்தில் இருக்கிறார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 187 ரன்கள் இலக்கை துரத்தியபோது, 36 பந்துகளில் 69 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். தற்போது நடைபெற்ற முடிந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 107 ரன்கள் இலக்கை துரத்தும் போது, இரண்டு விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது. அதன் பிறகு உள்ளே வந்த அவர், தனது சிறப்பான பார்மை வெளிப்படுத்தி, ரன்குவிப்பில் சுணக்கம் காட்டாமல் 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். இறுதியில் இந்திய அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருவதால் சர்வதேச டி20 தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார் சூர்யகுமார் யாதவ். கிட்டத்தட்ட 801 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார் முதல் இடத்தில் 861 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் முகமது ரிஸ்வான் முதலிடத்தில் உள்ளார்.

799 புள்ளிகளுடன் ஒரு இடம் பின்தள்ளப்பட்டு மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் இருக்கிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் பாபர் அசாம் சதம் விலாசினார். அதற்கு அடுத்த போட்டிகள் இவருக்கு எதிர்பார்த்த வகையில் அமையவில்லை. ஆனால் மற்றொரு துவக்க வீரர் ரிஸ்வான், இரண்டாவது போட்டியில் 88 ரன்கள், நான்காவது போட்டி டி20 போட்டியில் 88 ரன்கள் மற்றும் ஐந்தாவது டி20 போட்டியில் 63 ரன்கள் என தொடர்ந்து வெற்றிக்கு பங்காற்றி வருவதால் முதலிடத்தில் நீடிக்கிறார்.

ஆஸ்திரேலியா அணியுடனான தொடரில் அபாரமாக செயல்பட்ட அக்சர் பட்டேல் தரவரிசையில் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறார். 15 இடங்கள் முன்னேறி, தற்போது அவர் 18 வது இடத்தில் இருக்கிறார். புவனேஸ்வர் குமார் மோசமாக செயல்பட்டதால் தரவரிசை பட்டியில் பின்தங்கி பத்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.