இந்தியா 180 ரன்களை ஈஸியா சேஸ் பண்ணுதுனா அதுக்கு சூரியாகுமாரிடம் இருக்கும் இப்படியொரு திறமை தான் முழு முக்கிய காரணம் – ரோகித் ஓபன் டாக்!

சமீபகாலமாக இந்திய அணி 180 ரன்களை எளிதாக சேஸ் செய்து வெற்றி பெறுகிறது என்றால் அதற்கு சூரியகுமார் யாதவ் பங்களிப்பு மிக முக்கியமானது என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் ரோகித் சர்மா.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. குறிப்பாக மூன்றாவது டி20 போட்டியில் 187 ரன்களை கடக்க வேண்டியதாக இருந்தது. பவர் பிளே ஓவர்களில் இரண்டு விக்கெடுகளை இந்திய அணி இழந்த பிறகு தடுமாறி வந்தபோது, சூரியகுமார் யாதவ் மற்றும் விராட் கோலி இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமாக வழிநடத்திச் சென்றனர். குறிப்பாக சூரியகுமார் யாதவ் மிகச் சிறப்பான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி வேகமாக ரன் குவிப்பில் ஈடுபட்டார். அந்த தருணத்தில் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொள்ள விராட் கோலி நிதானமாக விளையாடினார். விரைவாக ரன்களை சூரியகுமார் யாதவ் அடித்ததால் இந்திய அணியால் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களுக்குள் இலக்கை எட்ட முடிந்து வெற்றியை பெற முடிந்தது.

சமீபகாலமாக சூரியகுமார் யாதவ் விளையாடி வரும் விதம், இந்திய அணிக்கு அவர் அளித்து வரும் பங்களிப்பு என இரண்டையும் பற்றி ரோகித் சர்மா சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். “சூரியகுமார் யாதவை பொருத்தவரை, அவர் எப்படிப்பட்ட திறமையான வீரர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் எளிதாக அடிக்கக்கூடிய இவர், தொடர்ச்சியாக இந்திய அணிக்கு தனது பேட்டிங் மூலம் பங்களிப்பை கொடுத்து வருவதால் இந்திய அணியில் ஆதிக்கம் நிறைந்த வீரராக உருவெடுத்து இருக்கிறார். போட்டியின் துவக்கத்தில் அவர் விளையாடும் சில ஷார்ட்கள் வைத்து அவர் இன்றைய நாள் எப்படி விளையாட போகிறார் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

குறிப்பாக பவர்-பிளே ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்த பிறகும் பொறுப்புடன், அதே நேரம் அதிரடியாகவும் அவர் விளையாடிய விதம் எதிரணியிடமிருந்து வெற்றியை நம் பக்கம் திருப்பியது. மறுமுனையில் விராட் கோலி பக்கபலமாக இருந்ததால் தைரியமாக சூரியகுமார் யாதவால் அடிக்க முடிந்தது. துவக்கத்தில் இரண்டு விக்கெட்டுகள் இழந்த பிறகு, 180 ரன்கள் சேஸ் செய்வது என்பது எளிதான காரியம் அல்ல. நிதானமாகவும், சரியான பந்துகளை ஷாட்கள் ஆடியது பார்ப்பதற்கே நன்றாக இருந்தது. இந்த வருடம் முழுவதும் சூரியகுமார் யாதவ் தனது ஆதிக்கத்தை செலுத்தி சிறந்த பங்களிப்பை கொடுத்திருக்கிறார். வரவிருக்கும் மிகப்பெரிய தொடரிலும் அவர்மீது என் நம்பிக்கை இருக்கிறது.” என்று பேசினார்.

Mohamed:

This website uses cookies.