ஸ்மித மற்றும் வார்னர் அதிரடி ஆட்டம்: இலங்கையை துவம்சம் செய்தது ஆஸ்திரேலியா

இலங்கை அணிக்கெதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னரின் அரை சதத்தால் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.

 

இலங்கை – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2-வது 20 ஓவர் போட்டி பிரிஸ்பேனில் இன்று நடைபெற்று. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் மலிங்கா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்நிலையில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 19 ஓவரில் 117 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்குகிறது.

BRISBANE, AUSTRALIA – OCTOBER 30: Steven Smith and David Warner of Australia fist bumb during game two of the Men’s International Twenty20 series between Australia and Sri Lanka at The Gabba on October 30, 2019 in Brisbane, Australia. (Photo by Chris Hyde/Getty Images)

ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர், பிஞ்ச் களமிறங்கினர். இலங்கை அணியின் கேப்டன் மலிங்கா வீசிய முதல் ஓவரின் 3-வது பந்தில் பிஞ்ச் டக் அவுட்டில் வெளியேறினார். அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித், வார்னர் ஜோடி அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தனர்.

ஆஸ்திரேலியா அணி 13 ஓவரில் 118 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்டீவ் ஸ்மித் 36 பந்துகளில் 56 (6 பவுண்டரி) ரன்களும் டேவிட் வார்னர் 41 பந்துகளில் (9 பவுண்டரி) 60 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்டநாயகனாக டேவிட் வார்னர் தேர்வு செய்யப்பட்டார்.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவரை தொடரை ஆஸ்திரேலியா அணி 2-0 என கைப்பற்றியது. 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி மெல்போர்னில் நவம்பர் 1-ம் தேதி நடைபெறுகிறது.

ஆஸ்திரேலிய சீனியர் கிரிக்கெட் அணியின் துணைப் பயிற்சியாளராக ஆண்ட்ரூ மெக்டொனால்டு நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆண்ட்ரூ மெக்டொனால்டு

ஆஸ்திரேலிய சீனியர் கிரிக்கெட் அணியின் துணைப் பயிற்சியாளராக ஆண்ட்ரூ மெக்டொனால்டு நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் இருந்து வருகிறார். துணைப் பயிற்சியாளராக இருந்த டேவிட் சாகர் கடந்த பிப்ரவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதன்பின் துணைப் பயிற்சியாளர் நியமிக்கப்படாமல் இருந்தார். ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் வாக் போன்றோர் ஆலோசகராக நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது ஆண்ட்ரூ மெக்டொனால்டு துணைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்’’ என்றார்.

Mohamed:

This website uses cookies.