ஸ்மித், வார்னருக்கு ஒரு வருட தடை?

ஸ்மித், வார்னருக்கு ஒரு வருட தடை? 5ஸ்மித், வார்னருக்கு ஒரு வருட தடை? 5

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 4 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது.

கடந்த 1-ம் தேதி தொடங்கிய முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், 3-ஆவது டெஸ்ட் ஆட்டம் கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் பேன்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்த முயன்றது விடியோவில் பதிவாகியது. இது ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் உதவியுடன் செய்யப்பட்டதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டை ஸ்மித்தும், பேன்கிராஃப்டும் ஒப்புக் கொண்டுள்ளனர். அத்துடன், அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஸ்மித்தும், துணை கேப்டன் பொறுப்பிலிருந்து டேவிட் வார்னரும் விலகிக் கொள்வதாக அறிவித்தனர்.ஸ்மித், வார்னருக்கு ஒரு வருட தடை? 1ஸ்மித், வார்னருக்கு ஒரு வருட தடை? 1

ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் உள்பட அந்நாட்டில் பல்வேறு தரப்புகளிலிருந்து இவர்களின் செயலுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. அந்நாட்டிலிருந்து வெளிவரும் பிரபல பத்திரிகைகளும் அவர்களை கடுமையாக சாடி முதல் பக்கத்தில் செய்திகளை வெளியிட்டுள்ளன. சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்களும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கடைசி டெஸ்ட் போட்டியில் ஸ்மித் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் அவருக்குப் பதிலாக மேட் ரென்ஷா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நடைபெற்ற சம்பவங்களால் ஆஸ்திரேலிய துணை கேப்டன் டேவிட் வார்னர் மிகுந்த மனவருத்தத்துக்கு ஆளாகியுள்ளார். அவருடைய நடவடிக்கைகள் கவலையளிக்கும்படி உள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது. சக வீரர்களிடம் அவர் அதிகம் கோபப்படுவதாகவும் தனிமையை விரும்பும் மனிதராக மாறிவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

பந்தைச் சேதப்படுத்தி கையும் களவுமாக ஆஸ்திரேலிய வீரர் பேங்கிராப்ட் பிடிபட பின்னணியில் இருந்த ஸ்மித், வார்னர் சிக்க தற்போது பயிற்சியாளர் டேரன் லீ மேன் தன் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக டெலிகிராப் செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா இதனை ஊர்ஜிதம் செய்யவில்லை என்றாலும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைவர் சதர்லேண்ட் தென் ஆப்பிரிக்காவுக்கு விரைந்துள்ளதன் பின்னணியில் டேரன் லீ மேன் ராஜினாமா முடிவு இருக்கலாம் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சதர்லேண்ட் வீரர்களையும் பயிற்சியாளரையும் இன்று சந்திக்கிறார், இன்று மாலைவாக்கில் செய்தியாளர்கள் சந்திப்பில் முழு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மித், ஐடியா கொடுத்த வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது. அப்படி நிகழ்ந்தால் இருவருக்கும் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும், காரணம் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆட முடியாது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிகபட்ச சம்பளம் வாங்கும் வீரர்கள் ஸ்மித் மற்றும் வார்னர், இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து மட்டும் தடை செய்துவிட்டு இருவரையும் ஐபிஎல் கிரிக்கெட்டில் சம்பாதிக்க விட்டால் அது மிகப்பெரிய மோசமான முடிவுக்கு முன்னுதாரணம் ஆவதோடு ஆஸ்திரேலிய மக்களின் கடும் கோபத்துக்கும் ஆளாக வேண்டும், எனவே கிரிக்கெட் ஆஸ்திரேலியா கடும் நெருக்கடியில் உள்ளது.

மேலும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் ஸ்பான்சர்களும் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் அவர்களும் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுடனான வணிக உறவுகளை முறித்துக் கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Editor:
whatsapp
line