தோனி, சச்சின் இல்லை ; இந்த வீரரை போன்று விளையாட வேண்டும்; ஸ்மிருதி மந்தனா சொல்கிறார் !!

தோனி, சச்சின் இல்லை ; இந்த வீரரை போன்று விளையாட வேண்டும்; ஸ்மிருதி மந்தனா சொல்கிறார்

இந்திய ஆண்கள் அணியின் கேப்டன் விராட் கோஹ்லியை போன்று களத்தில் நிலைத்து நின்று விளையாட வேண்டும் என இந்திய பெண்கள் அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.

இந்திய பெண்கள் அணியின் துவக்க வீரரான ஸ்மிருதி மந்தனாவின் ஆட்டத்திறனுக்கும், அழகிற்கும் மிகப்பெரும் ரசிகர் படையே உள்ளது. பெண்கள் அணியின் சேவாக் என்று அழைக்கப்படும் அளவிற்கு முதல் பந்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஸ்மிருதி மந்தனா பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார்.

இந்தநிலையில், சமீபத்தில் ஸ்மிருதி மந்தனா அளித்த பேட்டி ஒன்றில் தனது கிரிக்கெட் அனுபவங்கள் குறித்து பல்வேறு விசயங்களை பகிர்ந்துள்ளார்.

மந்தனா பேசியதாவது;

நான் இந்திய மகளிர் அணியில் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. யாருடனும் என்னை ஒப்பிடுவது எனக்கு பிடிக்காது. ஆனால், விராட் கோலி போல் களத்தில் விளையாட வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.

அவரின் ஆட்டம் எனக்கு ஊக்கமளிக்கக் கூடிய வகையில் இருக்கிறது. பல சமயங்களில் கடுமையாக போராடி இந்திய அணிக்கு வெற்றிகளைப் பெற்றுத் தந்திருக்கிறார். அதேபோல், நானும் இந்திய அணிக்கு வெற்றிகளைத் தேடித்தர வேண்டும் என்று நினைக்கிறேன்” என்றார்.

கொரோனாவால் 4 மாதங்கள் வீட்டிற்குள் முடங்கியிருந்த போது எதிர்கொண்ட இன்னல் குறித்துப் பேசியபோது, “முதல் மாதம் மிகவும் கடினமாக இருந்தது. ஏனென்றால், இதற்குமுன்பு நான் வீட்டிற்குள் அடங்கியிருந்தது கிடையாது. வீட்டில் இருந்த உபகரணங்களை வைத்து பயிற்சிகள் மேற்கொண்டேன். டும்பத்தினருடன், சமூக வலைதளங்களிலும் அதிக நேரங்களை செலவிட்டேன்” என்றார்.

Mohamed:

This website uses cookies.