இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு ஆதரவான கருத்தை பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது பேசியுள்ளார்.
சமகால கிரிக்கெட் தொடரின் தலை சிறந்த பேட்ஸ்மேனாக திகழும் விராட் கோலி கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்ததற்குப் பிறகு இதுவரை ஒருமுறை கூட சதம் அடிக்கவில்லை.
கடந்த இரண்டு வருடங்களாக சதம் அடிப்பதில் தடுமாறி வரும் விராட் கோலியை சில கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர்.
என்னதான் விராட் கோலி சதம் அடிக்கவில்லை என்றாலும் தனது சிறப்பான பேட்டிங் மூலம் இந்திய அணிக்கு ரன்களை குவித்து கொண்டுதான் உள்ளார், இருந்தபோதும் இவரை ஏன் விமர்சிக்கிறார்கள் என்று விராட் கோலிக்கு ஆதரவாக பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி பத்திரிகையாளர்கள் சந்திப்பின் பொழுது விராட் கோலிக்கு ஆதரவான தனது கருத்தை பேசியுள்ளார்.
அதில் பேசிய அவர், விராட் கோலி சதம் அடிக்கவில்லை என்றால் என்ன இப்போது,சதம் அடித்தால் தான் நல்ல வீரரா..?,அவர் அடித்த மற்ற ரன்கள் எல்லாம் உங்கள் கண்ணுக்கு தெரியலையா..?,விராட் கோலி எப்பொழுதும் சிறப்பாகவே செயல்படுகிறார். 50அல்லது 60 ரன்கள் அடித்து கொண்டுதான் இருக்கிறார்,இந்த ரன்கள் இந்திய அணிக்கு மிகப்பெரும் உதவியாக தான் இருக்கிறது, தேவையில்லாமல் யாரும் குறை சொல்ல தேவையில்லை.மேலும் விராட் கோலி கேப்டனாக இருக்கும்போது பந்து வீச்சாளர்களை புரிந்து கொண்டு அவர்களுக்கு உதவுவார்,மேலும் பந்து வீச்சாளர்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பார்,விராட் கோலி ஒரு சிறந்த கேப்டன் என்று முகமது சமி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.