2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் டெல்லி கேப்பிடல் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை தனது அணியின் கேப்டனாக தேர்ந்தெடுப்பதற்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனியாக 20 கோடி ரூபாயை ஏலத்தொகையில் இருந்து தனியாக ஒதுக்கி வைத்துள்ளதாக கேள்விப்பட்டேன் என்று ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.
2021 ஐபிஎல் தொடருக்கு பின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக பயணிக்க மாட்டேன் என்று விராட் கோலி தெரிவித்து விட்டதால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது அணியில் திறமையான ஒரு கேப்டனினை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற முனைப்போடு திட்டமிட்டு வருகிறது.
இந்தநிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வழி நடத்துவதற்கான அனைத்து திறமையும் தகுதியும் டெல்லி அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு தான் உள்ளது என்று பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்து வந்த நிலையில் பெங்களூர் அணியும் அதே முடிவை தான் வைத்துள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் கிரிக்கெட் தொடர் சம்பந்தமான செய்திகளை அதிகமாக பேசி வரும் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வைத்துள்ள திட்டம் குறித்து விரிவாகப் பேசியுள்ளார்.
அதில் பேசிய அவர், தற்பொழுது இஷான் கிஷன் வெளியேறிவிட்டார்,இதன் காரணமாக அவருக்கு செலவிடப்படும் தொகை மிச்சம் ஆக்கப்பட்டுள்ளது, இதன் காரணமாக ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்படுவார், அது 15-16 கோடி இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் நம்பகமான ஒருவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஸ்ரேயாஸ் ஐயரை தனது அணியில் இணைப்பதற்காக ஏலத்தொகையில் இருந்து 20 கோடி ரூபாய் தனியாக ஒதுக்கி வைத்து உள்ளதாக தெரிவித்துள்ளார். ஸ்ரேயாஸ் ஐயர் சிறந்த கேப்டன் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது, இதன்காரணமாக கொல்கத்தா மற்றும் பெங்களூர் ஆகிய இரண்டு அணிகளும் இவரை எப்படியாவது தனது அணியில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று போட்டிபோடும், இதன் காரணமாக இந்த ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் நிச்சயம் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்படும் வீரர்களில் ஒருவராக இருப்பார் என்று ஆகாஷ் சோப்ரா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.