உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை காண மாஸ்கோ சென்றுள்ளார் கங்குலி

மாஸ்கோவில் இன்றிரவு நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை காண கங்குலி ரஷியா சென்றுள்ளார்.

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை காண மாஸ்கோ சென்றுள்ளார் கங்குலி
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி மாஸ்கோவில் உள்ள லுஸ்னிக்கி மைதானத்தில் இன்றிரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் பிரான்ஸ் – குரோசியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியை காண உலகில் உள்ள பெரும்பாலான தலைவர்கள் மாஸ்கோ சென்றுள்ளனர்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இடது கை பேட்ஸ்மேனும் ஆன கங்குலி கால்பந்து போட்டியின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இவர் இங்கிலாந்து – இந்தியா இடையிலான கிரிக்கெட் தொடரில் வர்ணனையாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியை பார்ப்பதற்காக மாஸ்கோ சென்றுள்ளார். இதை கங்குலி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் நேற்று நடந்த 21வது உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், குரோஷியா அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு ரூ.255 கோடியும், 2-வது இடம் பிடித்த குரோஷியாவுக்கு ரூ.188 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. அணியில் உள்ள அனைத்து வீரர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இந்த தொகை அந்தந்த அணிகளின் பாலிசிகளுக்கு ஏற்றவாறு பகிர்ந்து அளிக்கப்படும்.

இந்த உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து கேப்டன் ஹேரி கேனுக்கு (6 கோல்) தங்க ஷூ விருது வழங்கப்பட்டது. இங்கிலாந்து வீரர் ஒருவர் தங்க ஷூ விருது பெறுவது கடந்த 32 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். பிரான்சின் கைலியன் எம்பாப்வே, கிரீஸ்மான், பெல்ஜியத்தின் ரோம்லு லுகாகு, போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ரஷ்யாவின் செர்ஷிவ் ஆகியோர் தலா 4 கோல்களுடன் அடுத்த இடத்தில் உள்ளனர்.

சிறந்த கோல் கீப்பருக்கான ‘தங்க கையுறை’ (Gloves) விருதை பெல்ஜியம் கோல் கீப்பர் கோர்ட்டோஸ் தட்டிச்சென்றார்.

ஃபேர் பிளே (Fair Play) விருது ஸ்பெயின் அணிக்கு கிடைத்தது.

நடப்பு உலகக் கோப்பைத் தொடரில், அனைவரையும் வியக்க வைக்க விதத்தில் ஆடிய, பிரான்ஸை சேர்ந்த 19 வயதே ஆன எம்பாப்வே, ‘Emerging Player’ விருதை வென்றார்.

இந்தத் தொடரில் சிறப்பாக ஆடியதற்கான ‘தங்க கால்பந்து’ விருதை குரோஷிய கேப்டன் மோட்ரிச் பெற்றார்.

Editor:

This website uses cookies.