ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இதனை செய்தால் தொடரை நடத்தலாம் எச்சரிக்கை கொடுத்த சௌரவ் கங்குலி
இந்திய அணி வரும் டிசம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது கொரோனா தாண்டவமாடிக் கொண்டிருப்பதால் எங்கு சென்றாலும் உலகம் முழுவதும் கடுமையான கெடுபிடிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆஸ்திரேலியாவிற்கு இந்திய அணி சென்றாலும் இந்திய வீரர்களுக்கும் இந்த கெடுபிடிகள் இருக்கும். இதன் காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் இந்திய வீரர்களை இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. தனிமைப்படுத்தப்பட்டு விட்டு அதன் பின்னர் பயிற்சி ஆட்டத்தில் பின்னர் டெஸ்ட் ஆட்டத்தில் கலந்து கொள்ளலாம் என்று ஆஸ்திரேலிய அணி அறிவித்துள்ளது.
இதன் காரணமாக தற்போது சௌரவ் கங்குலி இது குறித்து பேசியுள்ளார்…
அவர் கூறுகையில் நம் கிரிக்கெட் வீரர்கள் ஹோட்டல் அறையிலேயே இரண்டு வாரத்திற்கு வெறுமனே உட்கார்ந்து இருக்க முடியாது. அது அவர்களுக்கு மன அழுத்தத்தையும் மன சோர்வையும் ஏற்படுத்தும். தனிமைப்படுத்துதல் சரியானதுதான். ஆனால் இதன் காலத்தை குறைக்க வேண்டும். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் மிகச்சரியாக சென்று கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக தனிமைப்படுத்தல் நாட்களை குறைக்கலாம். அதன்பின்னர் தொடரில் கலந்து கொள்ளலாம் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு செய்தி அனுப்பியுள்ளார் சௌரவ் கங்குலி.
விராட் கோலி தலைமையில் இந்திய அணி டிசம்பர் – ஜனவரி மாதங்களில் நான்கு டெஸ்ட் போட்டிகளுக்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. 2018-19 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது.
மேலும் ஐபிஎல் தொடர் இல்லாமல் இந்த ஆண்டு முடிய விரும்பவில்லை என்றும் கங்குலி கூறியுள்ளார்.