இந்த உலகக்கோப்பை இந்திய அணிக்கு தான்; கங்குலி நம்பிக்கை
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தான் நிச்சயம் வெல்லும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இதில் அரையிறுதி போட்டியில் சுப்மன் கில்லின் அதிரடி சதம் மூலம் 203 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடிய இந்திய இளம் அணி, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
மற்றொரு அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்த இரு அணிகள் இடையேயான உலக்கக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி வரும் 4ம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய இளம் அணி, நிச்சயம் வெற்றி பெற்றும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இது குறித்து கங்குலி கூறியதாவது “இந்த உலகக்கோப்பையை இந்திய அணி கண்டிப்பாக வெல்லும். இந்த இளம் வீரர்களை இந்திய கிரிக்கெட் அணியின் வடிவமைப்பு சிறந்த வீரர்களாக மாற்றியுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்திய அணியை வேறு எந்த அணியாலும் அசைக்க முடியாது.’ .
கங்குலியின் நம்பிக்கை படி இந்திய அணி இந்த முறை கோப்பையை வெல்லும் பட்சத்தில் இது அணிக்கு நான்காவது உலகக்கோப்பையாகும்.