இவர்களால் தான் இந்திய அணி பலம்மிக்கதாக இருக்கிறது; கங்குலி வெளியிட்ட சீக்ரெட்!
இவர்கள் இருப்பதால் தான் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள் என கூறியுள்ளார் பிசிசிஐ தலைவர் கங்குலி.
மூன்றுவித கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணி மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதற்க்கு இந்திய அணியின் பேட்டிங் ஒருபுறம் இருந்தாலும், மிகப்பெரிய பலமாக அமைவது வேகப்பந்துவீச்சு ஆகும். 90களில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு சற்று கேள்விக்குறியாகவே இருந்தது.
ஆனால், கங்குலி கேப்டன் பொறுப்பேற்றபிறகு இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு மெல்லமெல்ல பலம் பெற்றதாக மாறிவந்தது. குறிப்பாக, இவரது தலைமையில், ஜவகல் ஸ்ரீநாத், வெங்கடேச பிரசாத், இர்பான் பதான், ஆஷிஷ் நெஹ்ரா மற்றும் ஜாஹீர் கான் போன்றோர் ஆடினார். இந்த வேகப்பந்துவீச்சு படை ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் என இரண்டிலும் ஆதிக்கம் செலுத்தி வந்தது.
தற்போது இந்திய அணிக்கு வேகப்பந்துவீச்சில் பலம் சேர்க்க பும்ராஹ், இஷாந்த் சர்மா, முகமது சமி, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ் உள்ளிட்ட பலரும் இருக்கின்றனர். இந்திய அணி குறிப்பாக வேகப்பந்துவீச்சில் உச்சம் பெறுவதற்கு அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் ட்ரெயினர்கள் தான் முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார் முன்னாள் கேப்டன் கங்குலி,
கங்குலி கூறுகையில், “பயிற்சியாளர்கள் மற்றும் ட்ரெயினர்கள் வீரர்கள் நல்ல உடல்தகுதியுடன் இருப்பதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறார்கள். அவர்கள் அதிகம் காயம் ஏற்படாமல் பாதுகாத்து சிறப்பாக செயல்பட வைத்திருக்கிறார்கள். இந்திய அணி வேகப்பந்துவீச்சில் பலம் பெற்றதாக இருக்கின்றது என்றால், அவர்கள் மட்டுமே காரணமாக இருக்க முடியும்.
அவர்களால் பேட்ஸ்மேன்களும் பலவிதத்தில் பயன்பெற்றார்கள். மொத்தத்தில் இந்திய அணியினை முறைப்படுத்த மிகுந்த உதவியாக அவர்கள் இருந்திருக்கிறார்கள்.” என சமீபத்திய பெட்டியில் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் ஊரடங்கு தொடர்ந்து நீடிப்பதால் ஜூலை மாதம் இறுதியில் மற்றும் ஆகஸ்ட் மாதம் துவக்கத்தில் நடக்கவிருந்த ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான தொடர் நிறுத்தப்பட்டது என பிசிசிஐ வெளியிட்டது. மேலும் வீரர்களுக்கு பயிற்சிகள் துவங்க ஆகஸ்ட் மாதம் ஆகலாம் எனவும் தெரிவித்தது.