ரோஹித், கோலி இல்லை… இந்த இரண்டு வீரர்களின் பயமில்லாத ஆட்டத்திற்கு காரணம் இது தான்; சவுரவ் கங்குலி ஓபன் டாக் !!

சமீபகாலமாக இந்திய அணியில் இளம் வீரர்கள் மிக சிறப்பாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களின் அதிரடியான விளையாட்டால் இந்திய அணி பல முறை வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் இளம் வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் பயம் இல்லாமல் மிகவும் அதிரடியாக விளையாடி தங்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளனர்.

இந்நிலையில் நவீன காலத்து கிரிக்கெட் வீரர்கள் ஏன் பயமில்லாமல் விளையாடுகிறார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சவுரவ் கங்குலி பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

அதில் அவர் கூறியதாவது,தற்போது உள்ள கிரிக்கெட் வீரர்கள் மிகவும் பயமில்லாமல் விளையாடுகிறார்கள், இதற்கு காரணம் அவர்களுடைய மிகச்சிறந்த வெளிப்பாடு தான், மேலும் அவர்கள் இப்படி பயமில்லாமல் விளையாடினால் தான் அடுத்தடுத்த வாய்ப்புக்கான கதவுகள் திறக்கும் என்பதை அவர்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். மேலும் அவர்கள் இதற்காக மிகவும் முயற்சி செய்கிறார்கள் இதன் காரணமாகவே அவர்கள் பயமில்லாமல் விளையாடுகிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது தற்போதைய இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் மற்றும் சில இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது இளம் வயதிலேயே பயம் இல்லாமல் மிகச் சிறப்பாக செயல்படுகிறார்கள். அவர்கள் சர்வதேச போட்டிகளுக்கு மிகவும் தயாராக உள்ளனர். அவர்கள் திறமையால் மட்டும் அந்த நிலைமைக்கு வரவில்லை, மனதளவிலும் இதற்காக மிகவும் தயாராகி உள்ளார்கள் என்று தெரிவித்தார்.

மேலும் தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கும் 14வது ஐபிஎல் சீசன் தொடரில் ஹார்த்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் மற்றும் ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிடல் அணிக்காக விளையாடுகிறார்க்கள்.

மேலும் ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக டெல்லி கேப்பிடல் அணிக்கு தலைமை ஏற்று மிக சிறப்பாக வழிநடத்தினார். குறிப்பாக தலைமை ஏற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்று தனது அணியை சிறப்பாக வழி நடத்துகிறார் இவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்று பல கிரிக்கெட் வல்லுனர்களும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.