கங்குலிக்கு கேப்டன்ஷிப்பிர்க்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது கடுமையாக விமர்சித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் திலிப் வெங்சர்க்கார்.
பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக உலக கோப்பை தொடருக்குப் பின் இந்திய அணியின் டி20 தொடர் கேப்டனாக செயல்பட மாட்டேன் என்று விராட் கோலி அறிவித்திருந்தார்,அதே போன்று உலக கோப்பை தொடருக்குப் பின் இந்திய அணியின் டி20 தொடர் கேப்டன் பதவியிலிருந்து கோலி ராஜினாமா செய்தார், இதனால் இந்திய அணியின் டி20 தொடர் கேப்டனாக அதிரடி வீரர் ரோஹித் சர்மாவை இந்திய அணி நியமித்தது.
இந்நிலையில் சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து இந்திய அணியின் புதிய ஒருநாள் தொடர் கேப்டனாக ரோஹித் சர்மா அணியை வழிநடத்துவார் என்ற திடீர் முடிவும் பிசிசிஐயால் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பிசிசிஐயின் தலைவர் சௌரவ் கங்குலி விராட் கோலியை டி20 தொடர் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்று தெரிவித்து இருந்தோம் ஆனால் அவர் விலகிவிட்டார்.இந்திய அணியின் லிமிடெட் ஓவர் போட்டிகளில் ஒரே ஒரு கேப்டன் செயல்பட்டால்தான் சிறப்பாக இருக்கும் என்பதற்காக விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி விட்டு ஒருநாள் தொடருக்கான கேப்டனாக ரோஹித் சர்மாவை நியமித்தோம் என்று தெரிவித்தார்.
ஆனால் சௌரவ் கங்குலி கூறியது போல் எந்த ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்றும் ஒருநாள் தொடர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது குறித்து தெளிவான எந்த ஒரு தகவலையும் தெரிவிக்கவில்லை என்றும் விராட்கோலி மருத்து பேசியது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பிசிசிஐ மற்றும் விராட் கோலி மத்தியில் நடைபெறும் இந்த மோதல் போக்கு குறித்து ஏற்கனவே பல விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்சர்க்கார் இந்த பிரச்சினை குறித்து பத்திரிக்கையாளர்களின் சந்திப்பில் பேசியுள்ளார்.
அதில், இந்த சம்பவம் மிகவும் வருத்தத்திற்குரியது இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இதை சரியான முறையில் அணுகியிருக்க வேண்டும், பிசிசிஐயின் தலைவர் கங்குலி செலக்சன் கமிட்டியிடம் பேசுவதற்கு எந்த ஒரு அதிகாரமும் கிடையாது, இந்திய அணியின் கேப்டன்ஷிப்பிலோ அல்லது இந்திய அணி வீரர்களின் தேர்வில் ஏதாவது குளறுபடி ஏற்பட்டால் அது தேர்வாளர்கள் குழு மற்றும் அதன் தலைவர் பார்த்துக்கொள்வார்கள், இந்திய அணியின் கேப்டனை நியமிப்பதற்கோ அல்லது மாற்றுவதற்கோ அதிகாரம் கிடையாது, கங்குலி இதில் தேவையில்லாமல் கங்குலி மூக்கை நுழைக்க கூடாது என்று கங்குலியை கடுமையாக விமர்சித்தார்.
மேலும் பேசிய அவர்,பிசிசிஐயின் அணுகுமுறை மிகவும் வருத்தத்திற்குரியது, விராட் கோலியை நாம் மதிக்க வேண்டும் அவர் இந்திய அணிக்காக பல சாதனைகளை செய்துள்ளார்,இந்த நடவடிக்கை நிச்சயம் அவரை காயப்படுத்தி இருக்கும் என்று திலிப் வெங்சர்க்கார் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.