முன்னாள் கிரிக்கெட் வீரரின் தம்பிக்கு கொரோனா வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நட்சத்திர வீரர் ரசிகர்கள் கவலை
முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் வீரரும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் தம்பிக்கு கொரோனா தோற்று உருவாகியுள்ளது. இவருடைய தம்பி சினேகாசிஸ் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்.
ஏற்கனவே இவர் முதல் தர போட்டியில் ஆடியுள்ளார். இந்நிலையில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் இவரது மனைவிக்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் இவரது குடும்பம் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களின் தம்பியான இவருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.
இதன் காரணமாக சவுரவ் கங்குலியும் அவருடன் அடிக்கடி போக்குவரத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் மேற்குவங்கத்தில் உள்ள தனது வீட்டில் தன்னை தானே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார் சௌரவ் கங்குலி.
இன்னும் 15 நாட்களில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதியாகவில்லை என்றால் தான் மீண்டும் அவர் பொதுவெளியில் நடமாடுவார். இல்லை என்றால் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை எடுத்துக் கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சௌரவ் கங்குலி கூறுகையில் ..
.என்னுடைய சகோதரருக்கு கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல் இருந்தது. தற்போது இவருக்கு வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக அவரை இங்கு உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம்.
தற்போது என்னையும் நானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். ஏனெனில் அவர் எங்களுடைய தொழிற்சாலைக்கு அவர் அடிக்கடி வந்து செல்வார். இதன் காரணமாக தொழிற்சாலையில் பணிபுரியும் அனைவரையும் தனிமைப்படுத்த அறிவுறுத்தி உள்ளேன் என்று கூறியுள்ளார் சௌரவ் கங்குலி.