ஐசிசி சேர்மனாக இந்தியாவின் சஷாங்க் மனோகர் இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் ஜூலை வரை உள்ளது, இந்நிலையில் அடுத்த ஐசிசி சேர்மன் பதவிக்கான போட்டியில் பாகிஸ்தனின் ஈசான் மானி இருந்தார்.
தற்போது இவர் போட்டியிட விருப்பம் இல்லை என்று தெரிவித்ததால் கங்குலி போட்டியின்றி அடுத்த ஐசிசி சேர்மனாவார் என்று ஐசிசி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக ஈசான் மானி கூறும்போது, “சேர்மன் பதவி போட்டியில் நான் இல்லை. என்னைப் போட்டியிடுமாறு இந்தியவிலிருந்து சிலர் கேட்டுக் கொண்டனர், ஆனால் எனக்கு ஆர்வமில்லை.
கங்குலி போட்டியிடுகிறாரா என்பது பற்றி எனக்குத் தெரியாது 2006-ல் என் பதவிக்காலம் முடிந்தவுடனேயே ஐசிசி பக்கம் போகக்கூடாது என்று முடிவெடுத்தேன். அப்போது நான் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டேன், இப்போது இம்ரான் கான் என்னை பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு சேவையாற்றுமாறு கேட்டுக் கொண்டார், அதனால் ஐசிசி பதவிப் போட்டியில் நான் இல்லை” என்றார்.
இதனையடுத்து ஐசிசி சேர்மன் பதவிக்கு சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு செய்யப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
முறைப்படி ஐசிசி தேர்தல் அறிவித்தால் இது தொடர்பாக அறிவிப்போம் என்று பிசிசிஐ அதிகாரி அருண் துமால் கூறியுள்ளார்.
கங்குலியின் அண்ணன் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவர் சவுரவ் கங்குலி 47. இவரது அண்ணன் சினேகாஷிஷ் கங்குலி 55, பெங்கால் கிரிக்கெட் சங்கத்தில் (சி.ஏ.பி.,) செயலாளராக உள்ளார். இவர், 1987–97ல் பெங்கால் அணிக்காக 59 முதல் தரம், 18 ‘லிஸ்ட் ஏ’ போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
சமீபத்தில் சினேகாஷிஷ் மனைவியின் பெற்றோர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். பின், சினேகாஷிஷ் மற்றும் இவரது மனைவிக்கு அறிகுறிகள் தென்பட்டன. உடனடியாக பரிசோதனை செய்ததில் சினேகாஷிஷ் கங்குலிக்கு பாதிப்பு இல்லை என தெரியவந்தது.
கோல்கட்டாவில் உள்ள சினேகாஷிஷ் கங்குலியின் குடும்பம் வேறு ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர். இதனால் சவுரவ் கங்குலிக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை.
கங்குலி குறித்து இந்திய அணி முன்னாள் கேப்டன், தேர்வுக்குழுத் தலைவராக இருந்த தமிழகத்தின் ஸ்ரீகாந்த் கூறுகையில்,‘‘கடந்த 1976ல் விண்டீசின் கிளைவ் லாயிட்ஸ், வெற்றிகரமான அணியை உருவாக்கினார். இதுபோல கங்குலி சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியை வலிமையானதாக மாற்றினார். இதனால் தான் அன்னியமண்ணில் வெற்றிகள் பெற முடிந்தது. கங்குலி பிறக்கும் போதே தலைவர்,’’ என்றார்.