இரண்டு இந்திய வீரர்களை ஆட வைக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் சண்டை போடும் கங்குலி! யார் அந்த இரண்டு பேர்?

இந்த இரண்டு இந்திய வீரர்களையும் ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டிகளில் ஆட வைக்க அதன் கிரிக்கெட் வாரியத்திடம் பிசிசிஐ தலைவர் கங்குலி வாக்குவாதம் செய்து வருகிறார்.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் வருகிற 27-ஆம் தேதி ஆஸ்திரேலிய மண்ணில் துவங்க இருக்கிறது. இதற்காக இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியா சென்று கொரோனா கட்டுப்பாடு விதிகளுக்கு உட்பட்டு தனிமைப்படுத்துதலில் 14 நாட்கள் இருந்தனர். அப்படி இருந்தபடியே பயிற்சி மேற்கொண்டனர். முதல் ஒருநாள் போட்டி துவங்கும் நாளில் ஒற்றுமையான பயிற்சியை மேற்கொள்ளலாம் என விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த தொடரில் இந்திய அணியின் துவக்க வீரரான ரோகித் சர்மா இடம் பெறவில்லை. ஆனால் விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டியை முடித்த பிறகு இந்தியா திரும்புவதால் அவரது இடத்தை நிரப்ப ரோகித்சர்மா பெயர் சேர்க்கப்பட்டது. மேலும் இந்த தொடரில் டெஸ்ட் போட்டியில் இஷாந்த் சர்மா இடம் பெற்றிருந்ததார். ஆனால் காயம் காரணமாக அவர் மற்ற வீரர்களுடன் ஆஸ்திரேலியா செல்லவில்லை.

பெங்களூருவில் உள்ள தேசிய அகடமியில் பரிசோதனை மற்றும் உடல்தகுதி இரண்டையும் சரிபார்த்த பிறகு ஆஸ்திரேலியா செல்லப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இசாந்த் சர்மாவுடன் ரோகித் சர்மாவும் அதே நேரத்தில் ஆஸ்திரேலியா செல்வார் என தகவல்கள் வெளிவந்தன. ஆனால் தற்போது இவர்கள் இருவரும் ஆஸ்திரேலியா செல்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

ஏற்கனவே டெஸ்ட் அணியில் விராட் கோலி இல்லாமல் இந்தியா சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. தற்போது ரோஹித், இஷாந்த் இருவரும் இல்லை என்றால் இந்திய அணிக்கு பெருத்த பின்னடைவாக அமையும்.

கொரோனா கட்டுப்பாடு விதிகளின்படி, குறைந்தபட்சம் 14 நாட்கள் ஒரு வீரர் தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட வேண்டும். பின்னர் பயிற்சியை மேற்கொண்ட பிறகு போட்டிகளில் பங்கேற்கலாம். ஆனால் தற்போது ரோகித் சர்மா மற்றும் இஷாந்த் இருவரும் ஆஸ்திரேலியா சென்று 14 நாட்கள் தனிமைப்படுத்தல் இருந்தாலும் உரிய பயிற்சி எடுக்காமல் நேரடியாக போட்டியில் பங்கேற்கும் படி இருக்கும். ஆகையால் இவர்கள் இருவரும் ஆஸ்திரேலியா செல்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த 14 நாட்கள் விதிமுறையை சற்று குறைத்துக் கொண்டு ஏழு நாட்கள் என வைக்கும்படி ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திடம் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையில்,

இந்திய அணியின் டெஸ்ட் போட்டியில் இடம் பெற்றுள்ள ரோஹித், இஷாந்த் இருவருக்கும் தனிமைப்படுத்தும் கால அவகாசமான 14 நாட்களில் இருந்து ஏழு நாட்களாக குறைத்துக்கொள்ளவேண்டும். ஏழு நாட்களுக்குப் பிறகு அவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு அதில் கொரோனா இல்லை என உறுதியானால் போட்டிகளில் பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டும்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் அதன் சுகாதார அமைச்சகமும் துவக்கத்தில் இதற்கு செவி சாய்த்ததாக தெரியவில்லை. இதனால் பிசிசிஐ அதிருப்தி அடைந்ததாகவும் நம்பத்தகுந்த தகவல்கள் வெளிவருகின்றன.

எது எப்படியாகினும் விரைவில் இதற்கான தீர்வை கண்டறிந்து ரோகித் சர்மா மற்றும் இஷாந்த் இருவரும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு சென்றால் மட்டுமே இந்திய அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும்.

Mohamed:

This website uses cookies.