பதவியில் இருந்து யார் இவரை நீக்கியது? கடுப்பான சவுரவ் கங்குலி

பயிற்சியாளர் பதவியில் இருந்து யார் இவரை நீக்கியது! கடுப்பான சவுரவ் கங்குலி

சில நாட்களுக்கு முன்னர் இந்திய மகளிர் ஆணையம் புதிய கோச்சாக ரமேஷ் பவார் நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னதாக ராமன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய மகளிர் அணியின் வீரர்கள் சிலர் கூறிய காரணத்தை தொடர்ந்து இந்திய கிரிக்கெட்டின் ஆலோசனை குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் ராமனை நீக்கிவிட்டு புதிய பயிற்சியாளரை நியமித்தது தனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தனது அதிருப்தியை தெரிவித்து உள்ளார்.

ராமன் நன்றாகத்தானே இந்திய அணியை வழி நடத்தினார்

இது குறித்து பேசியுள்ளார் சௌரவ் கங்குலி 2018 முதல் தற்பொழுது வரை இந்திய மகளிர் அணி 5 ஒருநாள் போட்டி தொடரை விளையாடி உள்ளது அதில் 4 தொடர்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றது. இந்த ஆண்டு துவக்கத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஒரே ஒரு தொடரில் மட்டும்தான் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமில்லாமல் சென்ற ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக உலக கோப்பை டி20 தொடரில் இறுதிவரை இந்திய அணியை ராமன் மிக சிறப்பாக வழிநடத்திச் சென்றார். அப்படி இருக்க ஏன் அவரை இவ்வளவு சீக்கிரமாக தலைமை பொறுப்பில் இருந்து நீக்கி விட்டார்கள் என தெரியவில்லை என்று தனது கருத்தை கூறியுள்ளார்.

இந்திய மகளிர் அணியின் புதிய பயிற்சியாளராக ரமேஷ் பவார் நியமனம்

ராமன் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பாக ரமேஷ் பவார் தான் தலைமை பயிற்சியாளராக இருந்தார். ஆனால் மித்தாலி ராஜ் உடன் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக அவரை நீக்கிவிட்டு புதிய தலைமை பயிற்சியாளராக ராமன் நியமிக்கப்பட்டார். தற்பொழுது மீண்டும் ராமன் நீக்கப்பட்டு ரமேஷ் பவர் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட அனைத்து ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்திய மகளிர் அணியுடன் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அங்கே அவரது தலைமையின் கீழ் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய மகளிர் அணி விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவரது தலைமையின் கீழ் மீண்டும் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Prabhu Soundar:

This website uses cookies.