எனக்கும் அந்த ஆசை உள்ளது; சவுரவ் கங்குலி ஓபன் டாக் !!

எனக்கும் அந்த ஆசை உள்ளது; சவுரவ் கங்குலி ஓபன் டாக்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக வேண்டும் என்ற ஆசை தனக்குள்ளும் இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

கங்குலி கூறியதாவது;

“நிச்சயமாக, பயிற்சியாளராக எனக்கும் ஆர்வமுள்ளது, ஆனால் இந்தக் காலக்கட்டத்தில் இல்லை. இன்னும் ஒரு கட்டம் போகட்டும் அப்போது பயிற்சியாளர் களத்தில் என் பெயரையும் இறக்குவேன்.

இப்போதைக்கு நான் பல விஷயங்களில் ஈடுபட்டுள்ளேன். ஐபிஎல், சிஏபி, டிவி வர்ணனை, இவற்ற்றை முதலில் நிறைவு செய்கிறேன். ஆனால் ஏதாவது ஒரு கட்டத்தில் நிச்சயம் இந்தியப் பயி்ற்சியாளராவேன். அதாவது என்னை தேர்வு செய்தால், ஆனால் நிச்சயமாக எனக்கு ஆர்வம் உள்ளடு, இப்போது அல்ல, எதிர்காலத்தில்.

Kolkata: Former Indian cricket captain and Cricket Association of Bengal (CAB) president Sourav Ganguly addresses budding cricketers during the inauguration of the Calcutta Police Surgeants’ Institute cricket academy in Kolkata on Friday. PTI Photo(PTI11_24_2017_000094A)

தலைமைப்பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களில் பெரிய பெயர்கள் எதுவும் இல்லை. மகேலா ஜெயவர்தனே விண்ணப்பிப்பார் என்று பார்த்தேன் ஆனால் அவர் விண்ணப்பிக்கவில்லை.  பெரிய பெயர்கள் எதுவும் இல்லை. எனவே குழு என்ன முடிவெடுக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.

சாஸ்திரி பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா என்பது பற்றி என் கருத்தை நான் இப்போதைக்கு நிறுத்தி வைக்கிறேன்.  அது பற்றி நான் கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. பயிற்சியாளரைத் தீர்மானிக்கும் அமைப்பு முறையிலிருந்து வெகுதூரம் விலகி நிற்கிறேன்.

மே.இ.தீவுகள் தொடரைப் பற்றி கூற வேண்டுமெனில் அங்கு அந்த அணி வலுவாகவே இருக்கும். டி20 அங்கு முன்னுரிமையான வடிவம். அவர்களும் டி20யை மகிழ்ச்சியுடன் ஆடுகின்றனர். அவர்கள்தான் நடப்பு உலக டி20 சாம்பியன்கள், புளோரிடாவில் இந்திய அணிக்கு 2 போட்டிகள் கடும் சவாலாகவே இருக்கும்.

டெஸ்ட் போட்டிகளும் கடினமாகவே இருக்கும், ஏனெனில் இங்கிலாந்துக்கு எதிராக அவர்கள் பிரமாதமாக ஆடி தொடரை வென்றனர்.  இந்திய அணியை அவர்கள் நிச்சயம் சவாலுக்குட்படுத்துவார்கள்” என்கிறார் கங்குலி.

Mohamed:

This website uses cookies.