தென்ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் அனைத்து விதமான கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு அறிவிப்பதாக இன்று (ஜனவரி 11) தெரிவித்துள்ளார்.
வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான கிறிஸ் மோரிஸ் மிக எளிதாக 140 kmph வேகத்தில் பந்து வீச கூடிய திறமை படைத்தவர் மேலும் அதிரடியாக பேட்டிங் செய்யும் திறமையின்மூலம் பல சாதனைகளையும் படைத்துள்ளார்.
2012ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு அறிமுகமான கிறிஸ் மோரிஸ் கிறிஸ் மோரிஸ் தென் ஆப்பிரிக்கா அணிக்காக 23 டி20 போட்டிகளில் பங்கேற்று 133 ரன்களும் 34 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
அதே போன்று 2013 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் தென்ஆப்பிரிக்கா அணி ஒருநாள் தொடரில் அறிமுகமான கிறிஸ் மோரிஸ் தென் ஆப்பிரிக்க அணிக்காக 42 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 468 ரன்களும் 48 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணிக்காக limiடெட் ஓவர் போட்டிகளில் மட்டும் அதிகம் விளையாடிய கிறிஸ் மோரிஸ் 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.
2021 ஐபிஎல் தொடரில் இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினாலும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக கடைசியாக 2019ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 போட்டியில் பங்கேற்று விளையாடிருந்தார், அதற்கு பின் தென் ஆப்பிரிக்க அணிக்கு விளையாடும் வாய்ப்பு இவருக்குக் கிடைக்கவில்லை.
ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் 2013 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட இவர் 2021 ஆம் ஆண்டுவரை ஐபிஎல் தொடரில் பங்கேற்று 81 போட்டிகளில் விளையாடி 618 ரங்களும் 95 விக்கெட்களும் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
குறிப்பாக 2021 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 16.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட மோரிஸ், அந்த ஆண்டிற்கான அதிக தொகை கொடுத்து ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர் என்ற பெயரை பெற்றார், ஆனால் இவர் அந்த தொடரில் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக விளையாடவில்லை.
இந்த நிலையில் அனைத்து விதமான கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு அறிவித்துள்ள கிறிஸ் மோரிஸ் உள்ளூர் போட்டிகளில் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளராக இனி பொறுப்பேற்று அணியை வழிநடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிறிஸ் மோரிஸ் தெரிவித்ததாவது, இன்று நான் அனைத்து விதமான கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வை அறிவிக்கிறேன், எனது கிரிக்கெட் பயணத்தில் பங்கேற்ற அனைவருக்கும் என்னுடைய நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், இந்தப் பயணம் மிகவும் அருமையாக இருந்தது, மேலும் பயிற்சியாளராக செயல்படுவதை நினைத்து மிகவும் ஆர்வமாக உள்ளேன் என்று கிறிஸ் மோரிஸ் தெரிவித்திருந்தார்.