19 ஓவரில் 259 ரன்களை சேஸ் செய்து வெறித்தனம்.. காட்டடி புகழ் வெஸ்ட் இண்டீஸுக்கு காட்டடின்னா என்னனு காட்டிய குயின்டன் டி காக்… தென்னாபிரிக்கா அபாரம்!

20 ஓவர்களில் 258 ரன்கள் அடித்து மிரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணியை பதிலுக்கு 18.5 ஓவர்களில் அதை சேஸ் செய்து பயம்காட்டி அபாரமாக வெற்றி பெற்றிருக்கிறது தென் ஆப்பிரிக்கா அணி

தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்கள் முடிவுற்றவுடன் தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரண்டாவது டி20 போட்டி இன்று செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க வீரர் கெயில் மேயர் 27 பந்துகளில் 51 ரன்கள் அடித்ததார். ஜான்சன் சார்லஸ் 46 பந்துகளில் 118 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை வானுயர எடுத்துச் சென்றார். இதில் 11 சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிகள் அடங்கும்.

கீழ் வரிசையில் ருமாரியோ ஷெப்பர்ட் 18 பந்துகளில் 40 ரன்கள் விளாச, 20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 258 ரன்கள் அடித்தது. டி20 வரலாற்றில் இதுவரை இவ்வளவு பெரிய ஸ்கோரை எந்த அணியின் சேஸ் செய்ததில்லை.

இருப்பினும் அதீத நம்பிக்கையுடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு துவக்க வீரர் குயின்டன் டி காக், முதல் ஓவரில் இருந்து வெளுத்துவாங்கத் துவங்கினார். மற்றொரு முனையில் ரிஷா ஹென்றிக்ஸ்-உம் நிறுத்தாமல் தனது பங்கிற்கு அவருடைய அதிரடியை காட்ட, பவர்-பிளே ஓவரிலேயே தென் ஆப்பிரிக்கா அணி 102 ரன்கள் அடித்தது.

நிறுத்தாமல் சென்று கொண்டிருந்த டி காக் 43 பந்துகளில் சதம் விளாசி, அடுத்த பந்திலேயே ஆட்டம் இழந்தார். ரீஷா ஹென்ரிக்ஸ் 28 பந்துகளில் 68 ரன்கள் விளாசி அவுட்டானார். முதல் விக்கட்டுக்கு இந்த ஜோடி 10.5 ஓவர்களில் 152 ரன்கள் சேர்த்தது.

கடைசி 9 ஓவர்களுக்கு கிட்டத்தட்ட 110 ரன்கள் தேவைப்பட்டபோது, மார்க்ரம்(38) மற்றும் கிளாஸன்(16) இருவரும் ஆட்டத்தை முடித்துக் கொடுத்தனர். 18.5 ஓவர்களில் வெறும் நான்கு விக்கெட்டுகள் மட்டுமே இழப்பிற்கு 259 ரன்கள் அடித்து வரலாற்றில் சாதனை படைத்திருக்கிறது.

இதற்கு முன், டி20 வரலாற்றில் இவ்வளவு பெரிய ஸ்கோரை எந்த அணியும் சேஸ் செய்ததில்லை. அதை தென் ஆப்பிரிக்கா அணி செய்து காட்டி இருக்கிறது.

Mohamed:

This website uses cookies.